நன்றி பாராட்டல்

அறியாமை என்னும் இருளகற்றி ஆய்வுப்
பொறியால் அறிவொளியும் ஏற்றிச்-செறிவாகப்
புள்ளியியல் கற்பிக்கும் பேராசான் சீலரே
உள்ளத்தால் நன்றி உமக்கு.

தெளிவாகக் கற்பிக்கும் தேர்ச்சியால் நீங்கள்
ஒளிவானச் செங்கதிரோன் ஒப்பீர்-எளிய
நகைச்சுவை கூட்டும் நளின உரையோ
வகைச்சுவை ஊட்டும் விருந்து.

எழுதியவர் : இரா. நந்தகோபால் (2-Jun-19, 11:39 pm)
சேர்த்தது : R Nandhagopal
பார்வை : 13404

மேலே