அழகு நிலா
அழகான ஒருமாலைப் பொழுது- அருகில்
அலங்கார முகமாக அருள்பொழியும் நிலவு
முழுநீல வானமோர் சேலை-முகிலின்
வெண்சரிகை கலைவண்ணம் வெளிப்படுங் காலை
விழிக்கவரும் விண்மீன்கள் அணிகள்- வியக்கும்
தூரத்தில் களவின்றி வைத்தவன் பணிகள்
பழகிடும் நிலவுமோர் பெண்ணே- பழகும்
உறவது வளர்வதும் தேய்வதும் உண்டே