வல்லரசு நிலை

வளர்ந்திட பொருளா தாரம்- வறிஞர்
வாழ்க்கை தரமும் மேம்படவே
மிளிர்ந்திட தூய்மை தெருவில்- வணிகம்
தொடங்க இலஞ்சமும் தொலைந்திடவே
தெளிந்திட மனித நேயம்- சாதி
சமயப் பூசலும் சரிந்திடவே
ஒளிர்ந்திட நாட்டில் அறிவியல் -அடைவோம்
வல்லரசாம் எனுமுயர் நிலையே

எழுதியவர் : இரா. நந்தகோபால் (2-Jun-19, 11:42 pm)
சேர்த்தது : R Nandhagopal
பார்வை : 80

மேலே