நீலவானமாய் நிமிருமோ

தெளியுமோ உள்ளறிவு
கிடைக்குமோ நுண்ணறிவு
நன்மையும் தீமையும்
நடைபெறும் முன்னறே
அறியுமோ உள் மனது

அகத்தில் தோன்றும் ஆற்றல்
அனைத்தையும் அறிய உதவுமோ
அடர்வான அறிவு பெருகி
அறிவியல் முறையில் அலாவுமோ
அணுவின் ஒத்த ஆற்றல் தோன்றுமோ?

நிகழ்வினால் மனம் பேதலிப்பது
நித்தம் நித்தம் குறையுமோ
நிகழ்விற்குள் நுழையாமல் நெஞ்சு
நீலவானமாய் நிமிருமோ - அல்லது
நீருக்கு அணைக்கும் நெருப்பாய் ஆகுமோ?

தெளிவாயும் திடமாயும் மாறிடின்
தீமையால் கைக்கொள்படினும் எழுவாய்
அளவாய் மனதை உடையதாய் - நீ
அழகாய் பழகினாய் எனில்
அனைத்திலும் துன்பம் இல்லை.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Jun-19, 6:49 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே