முனைவர் கி ராம்கணேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முனைவர் கி ராம்கணேஷ்
இடம்:  உடுமலைப்பேட்டை
பிறந்த தேதி :  01-Jan-2017
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jun-2022
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  4

என்னைப் பற்றி...

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை

என் படைப்புகள்
முனைவர் கி ராம்கணேஷ் செய்திகள்
முனைவர் கி ராம்கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2022 8:16 am

அரை டிக்கெட் என
எல்லோராலும் பரிகசிக்கப்பட்டவன்
ஓசி டிக்கெட் வாங்கியவர்களைப் பார்த்து
கர்வப் புன்னகையை வீசினான்
அப்பன் வீட்டு பஸ்சென
திருப்பியடித்தார்கள் புன்னகையை...
வம்பிழுக்கப் பார்த்தவன்
கண்டக்டரிடம்
இந்த பஸ் டீசலில் ஓடுகிறதா?
ஓசியில் ஓடுகிறதா?
கடுப்பான கண்டக்டர்
நட்டத்தில் ஓடுகிறதெனச் சொல்ல
நகரப் பேருந்து
நகர்ந்து சென்றது...

மேலும்

முனைவர் கி ராம்கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2022 6:31 am

வள்ளல்

தான் வரைந்த ஓவியத்தில்
நீர் பட்டு வண்ணம் கலைந்ததால்
வருத்தப்பட்டவள்
ஒரு நாள் வண்ணத்துப்பூச்சி
மழையில் நனைந்ததால்
குடை பிடிக்க ஓடிப்போனாள்
முட்டாள் தனம் என்ற தந்தை
மயிலுக்கு போர்வை தந்த பேகனை
வள்ளல் என்ற எண்ணத்தில்
வகுப்பெடுக்கிறார்...

- உடுமலை கி. ராம்கணேஷ்

மேலும்

முனைவர் கி ராம்கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2022 8:44 am

கற்பு

கற்புக் கனலியரின் வரலாறு
மாதந்தோறும் பிரசங்கம் செய்யப்படுகிறது
அலைகடலென திரண்ட பெண்களின் நடுவில்
பௌராணிகரின் சிலாகித்த பேச்சில்
தன்னை மறந்து அழுகிறாள் ஒருத்தி
பத்தினிக் கம்பம் பிடித்து
உச்சியில் ஏறி நிற்க உறுதியாக நிற்கிறாள்
மாதத்தின் மூன்று நாட்களில்...
மற்ற நாட்களில் பாழும் வயிற்றுக்குக் கஞ்சியூற்ற
ஒவ்வொருநாளும் கற்பை
உடலில் தெரியாத இடமொன்றில் மறைத்து வைக்கிறாள்
தினமும் அவள் வீட்டில் அடுப்பெரிகிறது
கற்பின் கனலில்..
..
- உடுமலை கி. ராம்கணேஷ்

மேலும்

முனைவர் கி ராம்கணேஷ் - முனைவர் கி ராம்கணேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2022 3:35 pm

பெண்மை இனிதடா

ரணங்களின் முடிவில்
ரத்தினங்களை ஈன்றாய்
சுமைகளைத் தாங்கி
சுகங்களைத் தந்தாய்
பிறந்த மண்ணிலிருந்து
பிரிந்து வந்தாய்
சொந்தங்களை விடுத்து
சொர்க்கத்தைக் காட்டினாய்
ஏன் பெண்ணே!
உனக்கான வாழ்க்கை
எங்களுக்கானதாய்
உதிரத்தைச் சிந்தினாலும்
உந்தியில் இடமளித்தாய்
தோல்வியுற்ற போதினில்
தோள் கொடுக்கும் தோழியானாய்
உன்னை உணவாகத் தந்தாயே
உண்ணும் உணவினையும் தந்த தாயே
சாதிகளில் உயர்ந்த சாதி எது தெரியுமா?
பெண்சாதி என்பது
பலருக்கும் தெரியுமாம்
சதிகளைத் தாண்டினாய்
சாதனைகள் படைக்கிறாய்
இருட்டுகளை வெளுத்து
விடியலைத் தருகிறாய்
வலிமையான மனதிலே
பாரம் சுமக்கிறாய்
கனிவான சொல்லிலே
கண

மேலும்

சிறப்பு... 16-Jun-2022 4:47 pm

பெண்மை இனிதடா

ரணங்களின் முடிவில்
ரத்தினங்களை ஈன்றாய்
சுமைகளைத் தாங்கி
சுகங்களைத் தந்தாய்
பிறந்த மண்ணிலிருந்து
பிரிந்து வந்தாய்
சொந்தங்களை விடுத்து
சொர்க்கத்தைக் காட்டினாய்
ஏன் பெண்ணே!
உனக்கான வாழ்க்கை
எங்களுக்கானதாய்
உதிரத்தைச் சிந்தினாலும்
உந்தியில் இடமளித்தாய்
தோல்வியுற்ற போதினில்
தோள் கொடுக்கும் தோழியானாய்
உன்னை உணவாகத் தந்தாயே
உண்ணும் உணவினையும் தந்த தாயே
சாதிகளில் உயர்ந்த சாதி எது தெரியுமா?
பெண்சாதி என்பது
பலருக்கும் தெரியுமாம்
சதிகளைத் தாண்டினாய்
சாதனைகள் படைக்கிறாய்
இருட்டுகளை வெளுத்து
விடியலைத் தருகிறாய்
வலிமையான மனதிலே
பாரம் சுமக்கிறாய்
கனிவான சொல்லிலே
கண

மேலும்

சிறப்பு... 16-Jun-2022 4:47 pm
முனைவர் கி ராம்கணேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2022 3:35 pm

பெண்மை இனிதடா

ரணங்களின் முடிவில்
ரத்தினங்களை ஈன்றாய்
சுமைகளைத் தாங்கி
சுகங்களைத் தந்தாய்
பிறந்த மண்ணிலிருந்து
பிரிந்து வந்தாய்
சொந்தங்களை விடுத்து
சொர்க்கத்தைக் காட்டினாய்
ஏன் பெண்ணே!
உனக்கான வாழ்க்கை
எங்களுக்கானதாய்
உதிரத்தைச் சிந்தினாலும்
உந்தியில் இடமளித்தாய்
தோல்வியுற்ற போதினில்
தோள் கொடுக்கும் தோழியானாய்
உன்னை உணவாகத் தந்தாயே
உண்ணும் உணவினையும் தந்த தாயே
சாதிகளில் உயர்ந்த சாதி எது தெரியுமா?
பெண்சாதி என்பது
பலருக்கும் தெரியுமாம்
சதிகளைத் தாண்டினாய்
சாதனைகள் படைக்கிறாய்
இருட்டுகளை வெளுத்து
விடியலைத் தருகிறாய்
வலிமையான மனதிலே
பாரம் சுமக்கிறாய்
கனிவான சொல்லிலே
கண

மேலும்

சிறப்பு... 16-Jun-2022 4:47 pm
மேலும்...
கருத்துகள்

மேலே