அரை டிக்கெட்

அரை டிக்கெட் என
எல்லோராலும் பரிகசிக்கப்பட்டவன்
ஓசி டிக்கெட் வாங்கியவர்களைப் பார்த்து
கர்வப் புன்னகையை வீசினான்
அப்பன் வீட்டு பஸ்சென
திருப்பியடித்தார்கள் புன்னகையை...
வம்பிழுக்கப் பார்த்தவன்
கண்டக்டரிடம்
இந்த பஸ் டீசலில் ஓடுகிறதா?
ஓசியில் ஓடுகிறதா?
கடுப்பான கண்டக்டர்
நட்டத்தில் ஓடுகிறதெனச் சொல்ல
நகரப் பேருந்து
நகர்ந்து சென்றது...

எழுதியவர் : முனைவர் கி ராம்கணேஷ் (27-Sep-22, 8:16 am)
Tanglish : arai ticket
பார்வை : 69

மேலே