பெண்மை இனிதடா

பெண்மை இனிதடா

ரணங்களின் முடிவில்
ரத்தினங்களை ஈன்றாய்
சுமைகளைத் தாங்கி
சுகங்களைத் தந்தாய்
பிறந்த மண்ணிலிருந்து
பிரிந்து வந்தாய்
சொந்தங்களை விடுத்து
சொர்க்கத்தைக் காட்டினாய்
ஏன் பெண்ணே!
உனக்கான வாழ்க்கை
எங்களுக்கானதாய்
உதிரத்தைச் சிந்தினாலும்
உந்தியில் இடமளித்தாய்
தோல்வியுற்ற போதினில்
தோள் கொடுக்கும் தோழியானாய்
உன்னை உணவாகத் தந்தாயே
உண்ணும் உணவினையும் தந்த தாயே
சாதிகளில் உயர்ந்த சாதி எது தெரியுமா?
பெண்சாதி என்பது
பலருக்கும் தெரியுமாம்
சதிகளைத் தாண்டினாய்
சாதனைகள் படைக்கிறாய்
இருட்டுகளை வெளுத்து
விடியலைத் தருகிறாய்
வலிமையான மனதிலே
பாரம் சுமக்கிறாய்
கனிவான சொல்லிலே
கண்ணியம் காட்டுகிறாய்
நானும் எடுக்கவேண்டும் ஒரு பிறவி
நீயாய் ,பெண்ணாய் , பெருமையாய்
பெண் பிறவி ...

- உடுமலை கி.ராம்கணேஷ்

எழுதியவர் : முனைவர் கி ராம்கணேஷ் (16-Jun-22, 3:35 pm)
பார்வை : 106

மேலே