உன் முந்தானையில் எனக்கு குடைபிடி 555

***உன் முந்தானையில் எனக்கு குடைபிடி 555 ***
ப்ரியமானவளே...
நீ முதல்முறை என்னை
பார்த்துவிட்டு போன...
உன் பார்வையின்
அர்த்தம் தான் என்னவோ...
எத்தனையோ நூல்களில்
தேடினேன் கிடைக்கவில்லை...
தனிமையை மட்டும்
ரசிக்க தெரிந்த எனக்கு...
துணையாக நீயும்
வந்தாய் என் வாழ்வில்...
சில நேரம் நீ
என்னை வெறுக்கிறாய்...
எத்தனை முறை நீ
என்னை வெறுத்தாலும்...
உன் பாசமும் என் பாசமும்
மறியதில்லை இன்றுவரை...
வாழவேண்டும்
என்று ஆசை இல்லை...
உன்னால் அது மட்டுமே
பேராசையாக இருக்கிறது...
இப்போதெல்லாம் எத்தனை
துன்பங்கள் வந்தாலும்...
என்னால்
தாங்கிக்கொள்ள முடியும்...
என்னருகில் என்றும்
நீ இருந்தால்...
உன் முந்தானையில்
எனக்கு குடைபிடி...
வெயில் மட்டுமல்ல என்
ஆயுளும் குறையாதடி...
என்னுயிரே.....
***முதல்பூ .பெ.மணி.....***