செந்தில் வேல் முருகன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  செந்தில் வேல் முருகன்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Sep-2014
பார்த்தவர்கள்:  428
புள்ளி:  5

என் படைப்புகள்
செந்தில் வேல் முருகன் செய்திகள்
செந்தில் வேல் முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2017 12:06 am

சன்னலின் வழியே சன்னமாய்
வரும் மெல்லிய பூங்காற்றே
ஸ்பரிசத்தை தீண்டியதோடு
இதயத்தையும் இலகுவாக வருடி
என்னுள் இருக்கும் காதலை
அதன் காரணகர்த்தாவிடம்
கொண்டு சேர்ப்பாயோ?
தென்றல் விடு தூது!

எங்களிருவரை ஒன்றாக்கிய
காதலின் ஆழத்தையும்
ஆளுமையையும் அறிந்திருந்தும்
வார்த்தைகளால் வெளிப்படுத்தினால்தான்
ஊர்ஜிதம் எனும் வழக்கம் பழக்கத்தில் உள்ளதோ வசந்தமே?

எதோ ஒருவிதமாய் வடக்கிலிருந்து வீசி
வசப்படுத்தும் வாடைக்காற்று போல்
ஆட்கொண்ட காதலைச் சொல்லலாம்
எனும்போதெல்லாம் பேசவிடாமல்
தடுக்கின்றதே அவள் கண்கள்!
சொல்லவிடாமல் நான் திண்டாடுவதை
ரசிக்கும் என் ரம்மியமே!

காதலை என்ன...
நம் கல்யாண ந

மேலும்

செந்தில் வேல் முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2017 12:04 am

புது சூழல்
புது மனிதர்கள்
புது அனுபவம்
ஏதேதோ எதிர்பார்ப்புகளுடன்
கல்லூரியில் முதல் நாள்!

அநேக மாணவிகள் கடந்துபோகையில்
அவள் மட்டும் அச்சுபிசகாமல்
என்னுள் தடம் பதித்தாள்!

சட்டென வீசிய சாரைக்காற்றில்
மெய்சிலிர்த்து தலைக்கேசம் வருடி...
சற்றேனும் பார்வைபிறழாத எனை நோக்கினாள்!
மழைநீரை முகர்ந்த புன்செய் நிலம்போல்
கிடைப்பற்கு அரிது கிடைக்கப்பெற்றவனாய்
மகிழ்ச்சியின் உச்சத்தில் மெய்மறந்தேன்!


பேசப்பேச நட்பு பழகப்பழக நட்பிற்கும் மேல்
நண்பர்கள் வட்டத்துடன் அரட்டை அடிப்பினும்
அவளை அடிக்கடி நோட்டமிடும் கண்கள் அனிச்சை செயலாய்!

எங்களுக்குள் உள்ள புரிதல்
எங்களுக்காக வாழும் உள்ளங்களின்

மேலும்

செந்தில் வேல் முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2017 11:59 pm

நீயும் நானும் தென்றலும் தீண்டலும்
நீயும் நானும் சாரலும் சிலிர்ப்பும்
நீயும் நானும் கவியும் கற்பனையும்
நீயும் நானும் தேடலும் விடையும்

நீயும் நானும் மாம்பிஞ்சும் நறுமணமும்
நீயும் நானும் தென்னங்கீற்றும் தனியழகும்
நீயும் நானும் பூவரசநிழலும் இளைப்பாறலும்

நீயும் நானும் தமிழும் தனிச்சிறப்பும்
நீயும் நானும் இன்சொலும் புன்சிரிப்பும்
நீயும் நானும் இளமையும் வேகமும்
நீயும் நானும் நேர்மையும் நெஞ்சுரமும்

நீயும் நானும் கலையும் நேர்த்தியும்
நீயும் நானும் பறையும் கருத்தும்
நீயும் நானும் இன்னிசையும் மனநிறைவும்

நீயும் நானும் நட்பும் நம்பிக்கையும்
நீயும் நானும் பெற்றோரும் பவித்ரமும்
நீயும்

மேலும்

செந்தில் வேல் முருகன் - செந்தில் வேல் முருகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2016 6:15 pm

மேகங்கள் உடைந்து மழையாவதை
கண்டுகளிக்க நீண்ட நாள் ஆசை!

சட்டென சாறல் மழை பெய்கையில்
ஓட்டமாய் ஓடிச்சென்று
மழை பெய்யும் பெய்யா இடத்தின்
எல்கை காண ஏனோ ஒருவித ஆசை!

ஆற்றுநீர் அலைகடலோடு சங்கமிக்கும்
காட்சி காண தீராத ஆசை!

எல்லையில்லா அழகை தன்வசம் வைத்திருக்கும்
ஐரோப்பிய நாடுகளை சுற்றிப்பார்க்க சுகமான ஆசை!

படித்த கல்லூரியில் பால்ய நண்பர்களோடு
ஒரு நாள் கழிக்க ஓயாத ஆசை!

பால் பொழியும் பெளர்ணமி நிலவில்
என்னவளோடு காதல் மொழி பேசி
அவள் உள்ளத்தின் ஒரத்தையாவது படித்துவிட இனம்புரியாத ஆசை!

பாசிபடிந்து படிமனான திறமைகளை
தூசி தட்டி மீள் உருவம் கொடுக்க
மிகப்பெரிய ஆசை!

ஆசை! அத்தனைக்கும் ஆசை!

                                     - செந்தில்

மேலும்

மேகங்கள் உடைந்து மழையாவதை
கண்டுகளிக்க நீண்ட நாள் ஆசை!

சட்டென சாறல் மழை பெய்கையில்
ஓட்டமாய் ஓடிச்சென்று
மழை பெய்யும் பெய்யா இடத்தின்
எல்கை காண ஏனோ ஒருவித ஆசை!

ஆற்றுநீர் அலைகடலோடு சங்கமிக்கும்
காட்சி காண தீராத ஆசை!

எல்லையில்லா அழகை தன்வசம் வைத்திருக்கும்
ஐரோப்பிய நாடுகளை சுற்றிப்பார்க்க சுகமான ஆசை!

படித்த கல்லூரியில் பால்ய நண்பர்களோடு
ஒரு நாள் கழிக்க ஓயாத ஆசை!

பால் பொழியும் பெளர்ணமி நிலவில்
என்னவளோடு காதல் மொழி பேசி
அவள் உள்ளத்தின் ஒரத்தையாவது படித்துவிட இனம்புரியாத ஆசை!

பாசிபடிந்து படிமனான திறமைகளை
தூசி தட்டி மீள் உருவம் கொடுக்க
மிகப்பெரிய ஆசை!

ஆசை! அத்தனைக்கும் ஆசை!

                                     - செந்தில்

மேலும்

செந்தில் வேல் முருகன் - செந்தில் வேல் முருகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2016 6:13 pm

அந்திவானம் பந்திவிரிக்கும் அற்புதமான செவ்வானம் சிவப்பு! யாரென்று தெரியாமல் தானம் செய்யும் ரத்தம் சிவப்பு!

யாருக்கோ ஒன்றெனில் பதைபதைக்கும் இதயம் சிவப்பு! போரென்றாலும் போட்டியென்றாலும் வாகை சூட வாழ்த்தும் திலகம் சிவப்பு

வெற்றி பெற்று மிடுக்குடன் நடக்கையில் திருஷ்டி கழிக்கும் ஆரத்தி சிவப்பு! கேலி செய்கையில் வெட்கப்படும் முறைப்பெண்களின் கன்னம் சிவப்பு!

இந்த பதியின் சரிபாதி நீ தான் என
ஊரறிய தொட்டு இட்டிடும் குங்குமம் சிவப்பு!

பிறவிப்பலனைப் பெற்றதுபோல் பெற்றமகள்
அப்பா என்று ஆசையாய்ச் சொல்லும் அதரம் சிவப்பு!

 சிவப்பு!
என் காதலைச் சொன்ன ஒற்றை ரோஜாவும் கூட!
                                                                                  - செந்தில்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே