நீயும் நானும்
நீயும் நானும் தென்றலும் தீண்டலும்
நீயும் நானும் சாரலும் சிலிர்ப்பும்
நீயும் நானும் கவியும் கற்பனையும்
நீயும் நானும் தேடலும் விடையும்
நீயும் நானும் மாம்பிஞ்சும் நறுமணமும்
நீயும் நானும் தென்னங்கீற்றும் தனியழகும்
நீயும் நானும் பூவரசநிழலும் இளைப்பாறலும்
நீயும் நானும் தமிழும் தனிச்சிறப்பும்
நீயும் நானும் இன்சொலும் புன்சிரிப்பும்
நீயும் நானும் இளமையும் வேகமும்
நீயும் நானும் நேர்மையும் நெஞ்சுரமும்
நீயும் நானும் கலையும் நேர்த்தியும்
நீயும் நானும் பறையும் கருத்தும்
நீயும் நானும் இன்னிசையும் மனநிறைவும்
நீயும் நானும் நட்பும் நம்பிக்கையும்
நீயும் நானும் பெற்றோரும் பவித்ரமும்
நீயும் நானும் சொந்த ஊரும் சொர்க்கமும்
நீயும் நானும் மோகமும் முதல் முத்தமும்
நீயும் நானும் காதலும் வாழ்க்கையும்