கடந்து போன காலம்
கடந்து போனது காலம்
காலார நடந்து போனது காலம்
பறவையாய் பறந்து போனது காலம்
நினைவிலிருந்து சிலருக்கு மறந்தும் போனது காலம்
இன்னிசைத் தருணங்களை இருப்பில் வைப்போம்
குத்திய முற்களை ஒளித்து வைப்போம்
இனித்திட்ட பொழுதுகள் நினைவில் வைப்போம்
வலித்திட்ட பொழுதுகள் மறந்து வைப்போம்
வீணையாய் இசைத்திட இதமாய் இருக்கும்
வீணாக வருந்திட சுமையே கொடுக்கும்
தேனாகும் சர்க்கரைப் பாகாகும் வாழ்க்கை
சிரித்தபடி வாழ்ந்திடுவோம் தீஞ்செயல்கள் தூரவைப்போம்
குழந்தைப் பருவம் யாவர்க்கும் இனிதே
பள்ளிப் பருவம் யாவர்க்கும் மகிழ்வே
கல்லூரிப் பருவம் யாவர்க்கும் சுவையே
காதல் பருவம் தித்திக்கும் கரும்பே
வாழ்வில் கடந்திடும் பருவங்கள் நடத்தும்
பாடங்கள் ஏற்போம் வாழ்வினை நூற்போம்
முதுமைப் பருவத்தில் ஞாபகம் கொண்டு
நோயின்றி நொடியின்றி இளமையாய் வாழ்வோம்