கல்லூரிக் காதல்

புது சூழல்
புது மனிதர்கள்
புது அனுபவம்
ஏதேதோ எதிர்பார்ப்புகளுடன்
கல்லூரியில் முதல் நாள்!

அநேக மாணவிகள் கடந்துபோகையில்
அவள் மட்டும் அச்சுபிசகாமல்
என்னுள் தடம் பதித்தாள்!

சட்டென வீசிய சாரைக்காற்றில்
மெய்சிலிர்த்து தலைக்கேசம் வருடி...
சற்றேனும் பார்வைபிறழாத எனை நோக்கினாள்!
மழைநீரை முகர்ந்த புன்செய் நிலம்போல்
கிடைப்பற்கு அரிது கிடைக்கப்பெற்றவனாய்
மகிழ்ச்சியின் உச்சத்தில் மெய்மறந்தேன்!


பேசப்பேச நட்பு பழகப்பழக நட்பிற்கும் மேல்
நண்பர்கள் வட்டத்துடன் அரட்டை அடிப்பினும்
அவளை அடிக்கடி நோட்டமிடும் கண்கள் அனிச்சை செயலாய்!

எங்களுக்குள் உள்ள புரிதல்
எங்களுக்காக வாழும் உள்ளங்களின்
இசைவையும் பெறும் எனும் நம்பிக்கையில்
காதலர்களாய் கல்லூரியின் கடைசி நாளில்!

எழுதியவர் : செந்தில் வேல் முருகன் (23-Dec-17, 12:04 am)
Tanglish : KALLURIK kaadhal
பார்வை : 1890

மேலே