தென்றல் விடு தூது
சன்னலின் வழியே சன்னமாய்
வரும் மெல்லிய பூங்காற்றே
ஸ்பரிசத்தை தீண்டியதோடு
இதயத்தையும் இலகுவாக வருடி
என்னுள் இருக்கும் காதலை
அதன் காரணகர்த்தாவிடம்
கொண்டு சேர்ப்பாயோ?
தென்றல் விடு தூது!
எங்களிருவரை ஒன்றாக்கிய
காதலின் ஆழத்தையும்
ஆளுமையையும் அறிந்திருந்தும்
வார்த்தைகளால் வெளிப்படுத்தினால்தான்
ஊர்ஜிதம் எனும் வழக்கம் பழக்கத்தில் உள்ளதோ வசந்தமே?
எதோ ஒருவிதமாய் வடக்கிலிருந்து வீசி
வசப்படுத்தும் வாடைக்காற்று போல்
ஆட்கொண்ட காதலைச் சொல்லலாம்
எனும்போதெல்லாம் பேசவிடாமல்
தடுக்கின்றதே அவள் கண்கள்!
சொல்லவிடாமல் நான் திண்டாடுவதை
ரசிக்கும் என் ரம்மியமே!
காதலை என்ன...
நம் கல்யாண நாள் பார்த்த
நற்செய்தியை கூற
இதோ வருகிறேன்!