மேகங்கள் உடைந்து மழையாவதை கண்டுகளிக்க நீண்ட நாள் ஆசை!...
மேகங்கள் உடைந்து மழையாவதை
கண்டுகளிக்க நீண்ட நாள் ஆசை!
சட்டென சாறல் மழை பெய்கையில்
ஓட்டமாய் ஓடிச்சென்று
மழை பெய்யும் பெய்யா இடத்தின்
எல்கை காண ஏனோ ஒருவித ஆசை!
ஆற்றுநீர் அலைகடலோடு சங்கமிக்கும்
காட்சி காண தீராத ஆசை!
எல்லையில்லா அழகை தன்வசம் வைத்திருக்கும்
ஐரோப்பிய நாடுகளை சுற்றிப்பார்க்க சுகமான ஆசை!
படித்த கல்லூரியில் பால்ய நண்பர்களோடு
ஒரு நாள் கழிக்க ஓயாத ஆசை!
பால் பொழியும் பெளர்ணமி நிலவில்
என்னவளோடு காதல் மொழி பேசி
அவள் உள்ளத்தின் ஒரத்தையாவது படித்துவிட இனம்புரியாத ஆசை!
பாசிபடிந்து படிமனான திறமைகளை
தூசி தட்டி மீள் உருவம் கொடுக்க
மிகப்பெரிய ஆசை!
ஆசை! அத்தனைக்கும் ஆசை!
- செந்தில்