சோமன் ஸ்ரீதரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சோமன் ஸ்ரீதரன் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Mar-2021 |
பார்த்தவர்கள் | : 605 |
புள்ளி | : 8 |
களுத்துறை என் ஜெயரட்னம்.
இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய தேசிய பூங்காவான பேராதனை தாவரவியல் பூங்கா (Royal Botanical Garden) கண்டி நகரில் இருந்து மேற்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில் மகாவலி கங்கைக் கரையை அண்மித்த பேராதனை நகருக்கும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கும் வெகு அண்மையில் கடல் மட்டத்திலிருந்து 460 மீட்டர் உயரத்தில் 147 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந்துள்ளது. 1750ஆம் ஆண்டு தொடக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்ட இத் தாவரவியல் பூங்கா இலங்கையின் காணப்படும் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருக
களுத்துறை என் ஜெயரட்னம்.
பல இலட்ச கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாச பயணிகளின் ஏகோபித்த சொர்க்கபுரியாக கருதப்படும் (யால தேசிய பூங்கா) யால தேசிய வன விலங்கு சரணாலயம் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தையும் ஊவா மாகாணத்தின் மொணராகலை மாவட்டத்தையும் இணைத்த 980 சதுர கிலோமீட்டர் (380 சதுர மைல்) பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து இருந்து 30 மீட்டர் (90அடி) உயரத்தில் புனித கதிர்காமம் நகரை அண்மித்த திஸ்ஸமாரகமயில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தேசிய வன விலங்கு பாதுக
ஆறறிவு
சோமன் ஸ்ரீதரன்
புல்லுண்டு புறம் வதியும்
ஐந்தறிவுகளிலும்
நெல்லுண்டு பறந்து திரியும்
புள்ளினத்திலும்
செல்லுண்டு சடமாய் கரையும்
தளபாட அஃறினையிலும்
கள்ளுண்டு சொல் உமிழும்
சில மானிடரிலும்
கீழிங்கு….
உள்ளொன்றும் வெளியொன்றும் உரைக்கும்
பொல்லா ஆறறிவு
சோமன் ஸ்ரீதரன்
களுத்துறை. என் ஜெயரட்னம்.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலேயே இலங்கையில் முதல் முதலாக தேயிலை 1824 மற்றும் 1839ஆம் ஆண்டுகளில் பரீட்சார்த்த நோக்கில் பேராதனை பூங்காவிலும் அதன் பின்னர் தேயிலை பயிர்செய்கையில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெயிலர் என்பவரால் 1867 ஆண்டு வணிக நோக்கில் கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை மற்றும் ஹேவாஹெட்டை நகரங்களுக்கு இடைப்பட்ட நூல்கந்தலா (LOOLCONDURA) தோட்டத்தின் கொண்டகலை காட்டு பகுதியில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளத
உலகம்
சோமன் ஸ்ரீதரன்-( 09.03.2021)
மகளே.. நீ பிறந்ததும்
பஞ்சு பொதி எடையில்
பிஞ்சு கைத்தொடலில்
நெஞ்சிற் சாய்த்த நொடியில்
என் உலகம் பிறந்தது
உனை சுமந்தேன்
சுமைகள் மறந்தேன்
இமையானேன்
உன் வளர்வில்
நீ தவழ்கையில்
நடை பயில்கையில்
மழலை பேசுகையில்
என் உலகம் வளர்வுற்றது
கடிகை துறந்தேன்
காலம் தொலைத்தேன்
பொம்மையானேன்
நீ வளர்ந்ததும்
உன் தீரா அர்ப்பனிப்பில்
கற்றலின் மெய்வருத்தலில்
கனவு மெய்படுத்தலில்
என் உலகமும் வளர்ந்தது
விழி கசிந்தேன்
இமயம் தொட்டேன்
விசிறி ஆனேன்
நாளை
உன் இலட்சிய நோன்பில்
தலைமைப் பண்பில்
மனிதநேய மாண்பில்
உலகம் உனதாகும்
இதயம் பல தொடுவாய்
உலகம் காப்பாய்
இமையாய்
சோமன் ஸ்ரீதரன்
(மகள்கள