Ssri vijay - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ssri vijay |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
Ssri vijay செய்திகள்
போடாவென
கோபத்தில் முகம்
திருப்பி செல்பவளை,
சமாதானப் படுத்துகிறேன்
பேர்வழியென்று...
காதுவரை சிவக்கடித்துக்
கொண்டிருந்தவனிடம்
எப்படி மறைப்பாள்..
அவனின்
'ப்ளீஸ்' பார்வையிலேயே...
நெகிழ்ந்து போன
நெஞ்சத்தை..?
பாரதியின் விருப்பம்
காதல் கண்ணம்மா..
ஆனால்,
அமைந்ததென்னவோ
சராசரி செல்லம்மா அல்லவா?
எல்லோருக்கும்
எல்லா விருப்பங்களும்
எப்போதும்..
நிறைவேறுவதேயில்லை.
ஏற்றுக் கொள்வோம்
வாய்த்த வாழ்வை..
பெற்றுக் கொள்வோம்
வாழ்வின் இனிமைகளை...
கற்றுக் கொள்வோம்
இனிமையின் கசடுகளை..!🌹
அசை போடுகிறேன்
அளவளாவிய கணங்களை..
வசை பாடுகிறேன்
வாழும் நொடிகளை..
திசை தேடுகிறேன்-உயிர்
தீண்டும் விழிகளை..
விசைவளியிலேறி
வந்து விடு..
பசலையில் வாடும்
இவள் அகம் காண..!
கருத்துகள்