வாழ்க்கை
![](https://eluthu.com/images/loading.gif)
பாரதியின் விருப்பம்
காதல் கண்ணம்மா..
ஆனால்,
அமைந்ததென்னவோ
சராசரி செல்லம்மா அல்லவா?
எல்லோருக்கும்
எல்லா விருப்பங்களும்
எப்போதும்..
நிறைவேறுவதேயில்லை.
ஏற்றுக் கொள்வோம்
வாய்த்த வாழ்வை..
பெற்றுக் கொள்வோம்
வாழ்வின் இனிமைகளை...
கற்றுக் கொள்வோம்
இனிமையின் கசடுகளை..!🌹