தமிழ் சரண் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தமிழ் சரண் |
இடம் | : புதுக்கோட்டை |
பிறந்த தேதி | : 29-Apr-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2021 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 5 |
தாய் தமிழுக்கு முதல் வணக்கம் தமிழ் மீது அதீத பற்று கொண்டவன் அதன் காரணமாக தமிழ்சரண் என்ற பெயரில் தமிழ் படைப்புகளை உருவாக்கி வருகிறேன் இயற்பெயர் சரவணன்
இட்லி கடையில் நின்று கொண்டிருந்த முதலாளியிடம் சிறு குழந்தை ஒன்று வந்து ஐயா அம்மா 30 ரூபாய்க்கு இட்லி வாங்கிட்டு வரச் சொன்னாங்க காசு நாளைக்குத் தருகிறார்களாம் என்றது. அதற்கு முதலாளி ஏற்கனவே நிறைய பாக்கி வரவேண்டியது இருக்குதேம்மா.
சரி பரவாயில்லை வாங்கிட்டு போ நாளைக்கு கொடுக்கச் சொல்லிரு அப்படின்னு சொல்லிட்டு கடை ஊழியரிடம் அந்த பாப்பாவிற்கு இட்லி கட்டி கொடுக்கச் சொன்னார்.
அப்போது அந்தக் கடையில் வாடிக்கையாக சாப்பிடும் ஒரு நபர் கடை முதலாளியிடம் ஏற்கனவே நிறைய பாக்கி இருக்குதுனு சொல்றீங்க மேலும் மேலும் ஏன் கொடுக்குறீங்க அப்படினு கேட்டாரு.
அதற்கு அந்த முதலாளி அந்த அம்மா தன்னோட குழந்தை பசிக்குதுனு
மல்லிகையே
உன்னை காதலித்தேன்
என் மனம் கவர்ந்தவளின்
கூந்தலில் மலர்ந்தது கண்டு
கார்மேகமே
உன்னை காதலித்தேன்
என்னவளின் கருங்கூந்தல் கலைந்தது கண்டு
மீனினமே
உன்னை காதலித்தேன்
கன்னி அவளின் இரு
கண்களைக் கண்டு
மானினமே
உன்னை காதலித்தேன்
மங்கை அவளின் பாதம்
மண்ணில் தவழ்ந்தது கண்டு
மூன்றாம் பிறையே
உன்னை காதலித்தேன்
முன்நின்ற என்னவளின்
முன்நெற்றி கண்டு
ரோஜா இதழே
உன்னை காதலித்தேன்
புன்முறுவல் பூத்த பெண் அவளின்
செவ்விதழ் கண்டு
மெல்லிசையே
உன்னை காதலித்தேன்
மங்கை அவளின்
மலர்க்கை வளை கண்டு
கண்டதெல்லாம் காதலித்து
காதல் வளர்த்தேன்
கன்னி அவளின் கரம் பிடிக்க
காலம் கடந்ததே
பெற்ற குழந்தைகளின் கல்விக்காக இலட்சியத்துடன் போராடும் அப்பாக்களுக்கு சமர்ப்பணம்
அப்பா மூன்றெழுத்தில் ஈன்றெடுத்த முன்நடத்தும் நாயகன்
அவர் கை பிடித்து நடந்த நாட்கள் ஞாபகம் இல்லை
அவரின் கை பிடிக்க நினைக்கும்போதோ அவர் என்னுடன் இல்லை
எனதாசை நிறைவேற்ற அவராசை குறைத்திடுவார்
என் பசிக்கு உணவளிக்க பட்டினியாய் உழைத்திடுவார்
நான் தவறிழைத்த வேளையிலே தள்ளி அடித்திடுவார்
தரை மீது விழுமுன்னே அள்ளி
அணைத்திடுவார்
அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது
அவர் அணைத்திட்ட வேளையிலே அதையும் நான் உணர்ந்தேனே
படிப்பறிவு இல்லாமல் பாரினிலே இன்னலுற்றோம்
என்றுணர்ந்த நாளினிலே நன்இலட்சியத்தை விதைத்தாரே
பெற்ற மக
பெற்ற குழந்தைகளின் கல்விக்காக இலட்சியத்துடன் போராடும் அப்பாக்களுக்கு சமர்ப்பணம்
அப்பா மூன்றெழுத்தில் ஈன்றெடுத்த முன்நடத்தும் நாயகன்
அவர் கை பிடித்து நடந்த நாட்கள் ஞாபகம் இல்லை
அவரின் கை பிடிக்க நினைக்கும்போதோ அவர் என்னுடன் இல்லை
எனதாசை நிறைவேற்ற அவராசை குறைத்திடுவார்
என் பசிக்கு உணவளிக்க பட்டினியாய் உழைத்திடுவார்
நான் தவறிழைத்த வேளையிலே தள்ளி அடித்திடுவார்
தரை மீது விழுமுன்னே அள்ளி
அணைத்திடுவார்
அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது
அவர் அணைத்திட்ட வேளையிலே அதையும் நான் உணர்ந்தேனே
படிப்பறிவு இல்லாமல் பாரினிலே இன்னலுற்றோம்
என்றுணர்ந்த நாளினிலே நன்இலட்சியத்தை விதைத்தாரே
பெற்ற மக
மாலை நேரம்
மருத்துவமனை ஓரம்
பிரசவ வலியில் மனைவியின் அலறல்
வலியின்றி வந்த கண்ணீர் எனது கண்களில்.
புரியாத புதிர் ஆணா ? பெண்ணா?
பாதம் தேய்த்துக் கொண்டு பரிமாறியது கால்கள்.
அலறல் குறைந்தது
அறைக்கதவு திறந்தது
மருத்துவரின் மௌனம் கலைந்தது
பெண் குழந்தை
இதுவரை கண்ணில் வழிந்த ஈரம் இதயத்தில் இறங்கியது.
இறைவனின் கட்டளை இதிலென்ன பிரிவினை.
செவிலியர் கொண்டு தந்த செல்வியை கரத்தினில் ஏந்தி முகத்தோடு முகம் புதைத்தேன்.
ஊட்டியின் சாரல் போல் உள்ளம் நெகிழ்ந்தது பெற்ற தாயே தன் கையில் தவழ்ந்தது போல்.
காலங்கள் கடந்தன
கனவுகள் வளர்ந்தன
அப்பா என்றவள் அழைத்திட்ட வேளையிலே அனைத்தையும் மறந்தேன்.
தமிழன்ன
அடியே கருப்பாயி
வானம் தான் வெளுத்துருச்சு
வான்கோழி கூவிருச்சு
வயித்து பொழப்போட்ட
வயல் வேலை காத்திருக்கு
வாடி புள்ள சீக்கிரமா
வாங்கருவா எடுத்துக்கிட்டு
இருடி செல்லத்தாயி
வயசுக்கு வந்த புள்ள
வாசலிலே படுத்திருக்கு நேத்து
வாங்கி வந்த அரிசியும் தான்
வட்டையில வேகுதடி
வயசுப்புள்ள வயித்துக்கு
வடிகஞ்சி வச்சிப்புட்டு
வயித்துல ஈரத்துணியிட்டு
வந்துடறேன் விரசாத்தான்
வக்கனையா வாழனும்னு
வாக்கப்பட்டு வந்தவதான்
வாந்தி எடுத்த முதல் நாளே
வந்தவனும் போயிட்டானே
வாய்க்கரிசி வாங்கிக்கிட்டு
தாலி கட்டியவன்
கட்டையில போகயில
கூடத்தான் போக எனக்கு
கொடுப்பினை இல்லையடி.
வயித்த சுமந்துக்கிட்