மனம் கவர் மனைவி

மல்லிகையே
உன்னை காதலித்தேன்
என் மனம் கவர்ந்தவளின்
கூந்தலில் மலர்ந்தது கண்டு

கார்மேகமே
உன்னை காதலித்தேன்
என்னவளின் கருங்கூந்தல் கலைந்தது கண்டு

மீனினமே
உன்னை காதலித்தேன்
கன்னி அவளின் இரு
கண்களைக் கண்டு

மானினமே
உன்னை காதலித்தேன்
மங்கை அவளின் பாதம்
மண்ணில் தவழ்ந்தது கண்டு

மூன்றாம் பிறையே
உன்னை காதலித்தேன்
முன்நின்ற என்னவளின்
முன்நெற்றி கண்டு

ரோஜா இதழே
உன்னை காதலித்தேன்
புன்முறுவல் பூத்த பெண் அவளின்
செவ்விதழ் கண்டு

மெல்லிசையே
உன்னை காதலித்தேன்
மங்கை அவளின்
மலர்க்கை வளை கண்டு

கண்டதெல்லாம் காதலித்து
காதல் வளர்த்தேன்
கன்னி அவளின் கரம் பிடிக்க

காலம் கடந்ததே அன்றி
கன்னி அவளைக் காணவில்லை

அவளை எண்ணி எண்ணி
இதழ் திறந்தேன் இறைவனிடம்

இவை அனைத்தும் ஒருசேர
இவ்வுலகில் பிறப்பதில்லை
உனக்கென பிறந்தவளை
உண்மையாய் காதலித்து பார்
இயற்கையின் சாடல்கள்
இவளிடத்திலும் உள்ளதெண்பாய்.

எழுதியவர் : தமிழ்சரண் (3-Feb-21, 9:03 am)
சேர்த்தது : தமிழ் சரண்
Tanglish : manam kavar manaivi
பார்வை : 104

மேலே