மனம் இருந்தால் வழி கிடைக்கும்

இட்லி கடையில் நின்று கொண்டிருந்த முதலாளியிடம் சிறு குழந்தை ஒன்று வந்து ஐயா அம்மா 30 ரூபாய்க்கு இட்லி வாங்கிட்டு வரச் சொன்னாங்க காசு நாளைக்குத் தருகிறார்களாம் என்றது. அதற்கு முதலாளி ஏற்கனவே நிறைய பாக்கி வரவேண்டியது இருக்குதேம்மா.
சரி பரவாயில்லை வாங்கிட்டு போ நாளைக்கு கொடுக்கச் சொல்லிரு அப்படின்னு சொல்லிட்டு கடை ஊழியரிடம் அந்த பாப்பாவிற்கு இட்லி கட்டி கொடுக்கச் சொன்னார்.
அப்போது அந்தக் கடையில் வாடிக்கையாக சாப்பிடும் ஒரு நபர் கடை முதலாளியிடம் ஏற்கனவே நிறைய பாக்கி இருக்குதுனு சொல்றீங்க மேலும் மேலும் ஏன் கொடுக்குறீங்க அப்படினு கேட்டாரு.
அதற்கு அந்த முதலாளி அந்த அம்மா தன்னோட குழந்தை பசிக்குதுனு சொன்னதால கடனாக போய் வாங்கிட்டு வான்னு சொல்லி இருப்பாங்க. நான் அந்த இட்லியை கொடுத்துவிடலைன்னா பசிக்காக அந்தக் குழந்தை ஏதாவது திருட்டு வேலையில் இறங்கி இருக்கும். அப்படி இல்லேன்னா அந்த குழந்தையோட பசிக்காக அந்த தாய் ஒரு தவறான பாதையில் போயிடுவா.
நான் உழைப்பை நம்பி தொழில் நடத்துறேன். நம்ம பணம் எங்கேயும் போயிராது. வந்துடும். இப்போதைக்கு எனக்கு ரெண்டு பேர் செய்யப்போற தப்பை தடுத்திருக்கேன் அப்படிங்கிற நிம்மதி போதும் என்றார். வந்தவரால் முதலாளியின் கருத்துக்கு மாற்றுக் கருத்து கூற இயலவில்லை. இறைவா இவரை மாதிரி சில நல்லவர்களால் தான் இந்த பூமி இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கிறது என மனதில் எண்ணிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்.

எழுதியவர் : தமிழ்சரண் (3-Feb-21, 7:39 pm)
சேர்த்தது : தமிழ் சரண்
பார்வை : 249

மேலே