55 இலியிச்
நளினி கிளம்பி போன பின்பும் நான் இன்னும் ஆச்சர்யத்தில் உறைந்து இருந்தேன். காலம்தான் அதிசயமாக எப்படி மனதை ஊடறுத்து கலைத்து அதிர்வூட்டி செல்கிறது.
நான் உடனே போனில் பேராசிரியர் சிவானந்தத்தை தொடர்பு கொண்டு பேசினேன். இலியிச்சின் தங்கை உறவு உள்ள நளினி பற்றி தெரியுமா உங்களுக்கு என்று கேட்டபோது அவர் அப்பெண் ஜியலாஜியில் ஆய்வுபட்டம் பெற கலியமூர்த்தியிடம் மாணவியாக பயின்றதை நினைவு கூர்ந்தார்.
நான் நளினி என் வீட்டுக்கு வந்தது பற்றி பேராசிரியரிடம் தெரிவித்தேன்.
எனில், அடுத்த பயணம் உன்னை அழைக்கிறது போலும் என்றார்.
அப்படியெனில், இம்முறை ஒரு வேளை அது நளினியோடும் இருக்கும் பேராசிரியர் என்று கூறினேன்.
அதுவும் சரிதான் என்றவர் அன்று மாலை வீட்டுக்கு வரும்படி கூறினார்.
நிச்சயமாக பேராசிரியர்... போடிக்கு ஆறு மணிக்குள் வந்து விடுவேன் என்று கூறி முடித்தேன்.
இலியிச் ஒரு நாவல் எழுதி இருக்கிறான் என்பதை அக்கணம் வரையிலும் நம்ப முடியவில்லை.
நளினி அது பற்றியே என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு அந்த நிகழ்வு பற்றி ஒன்றும் தெரியாது. இலியிச் இதை எப்படி சாத்தியமாக்கி இருப்பான் என்றும் யோசிக்க முடியவில்லை.
போடிக்கு போன மாலைப்பொழுதில் பேராசிரியர் முருகாம்பாள் காபி கடை வாசலில் நின்றிருந்தார்.
நாம் இப்போதே பார்வதி வீட்டுக்கு போகலாம் என்று கிட்டத்தட்ட கையை இழுத்து கொண்டு சென்றார்.
====================================