சர்மிளா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சர்மிளா
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Apr-2020
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என் படைப்புகள்
சர்மிளா செய்திகள்
சர்மிளா - எண்ணம் (public)
26-Aug-2020 1:11 am

தோல்விகள் இல்லாத வெற்றிகள் இருந்தால்

வாழ்க்கை இனிக்காது!!
சண்டைகள் இல்லாத உறவுகள் இருந்தால்
பாசங்கள் புரியாது!!
குறும்புகள் இல்லாத குழந்தைகள் இருந்தால் மொட்டுகள் மலராது!!

மேலும்

முற்றிலும் உண்மை 27-Aug-2020 12:39 pm
சர்மிளா - எண்ணம் (public)
26-May-2020 7:10 pm

#வாழ்க்கைப்பயணம்

எத்தனையோ மனிதர்கள் வந்து
 வந்து போவார்கள் பெற்றோரும் உடன் பிறந்தோரும் நண்பரும் நிலைத்திருப்பர்!!

எண்ணங்களை மேம்படுத்தி
எட்டிதான் பாருங்களேன் உலகத்தை
உயர்ந்ததொரு வாழ்க்கை உண்டாகும்!!

உயரத்தை முன்னிறுத்தி
உயர்ந்துதான் நில்லுங்களேன் மனதளவிலும் உடலளவிலும் ஒழுக்கநெறியிலும்!!

ஆத்திரத்தை பின்னுக்குத் தள்ளி
அன்புதான் காட்டுங்களேன் உயிர்களிடத்திலே
அமைதி உண்டாகும்!!

அரவணைக்கும் கைகளினாலே அன்னதானம் கொடுத்திடுங்கள் இவ்வுலகில் 
பசித்தவரே இருப்பதில்லை!!

கருணையுள்ளம் கொண்டிட்டவரே
கடவுளைக் கண்டிடுவர் இல்லாதோர்க்கு
கொடுத்து மகிழ்ந்திடுங்கள்!!

ஏழைப்பணக்காரன் என்றில்லை 
இறைவன் பார்வையில் நீ செய்த
 தருமமே உன் தலைகாக்கும்!!

உதவிக் கேட்டு வந்தவர்க்கு 
உதவி செய்து மகிழ்ந்திருங்கள் 
இறைவனே உங்களுக்கு கடனாளி!!

தூய உள்ளமதனை பேணி 
காத்திடுங்கள் உங்கள் உள்ளம் 
அதுவே இறைவனின் கோயில்!!

அறிவுக்கு முக்கியத்துவம் தந்ததனை உன்னில் பெருக்கிவிடு புத்தகம் படித்துநீயும் ஞானம் பெறுவாய் !!

அனுபவத்தால் கற்றுக் கொண்டு பிறருக்கும் கற்றுக் கொடு கல்விச் செல்வத்தை நீ வழங்கிடுவாயே!!

உலகத்தில் கற்க வேண்டிய பாடங்கள் எத்தனை எத்தனையோ கற்றது கைமண்ணளவு மட்டுமே!!

தோல்வியின் படிகளை ரசித்துக் கொண்டே கடந்து செல்லு 
அது உனக்கு ஏணியாகும்!!

தன்னம்பிக்கை தந்து உனக்குநீயே முயற்சி செய்து பாரு வாழ்க்கையில் வெற்றிப் பயணம் உண்டாகும்!!!

மேலும்

சர்மிளா - எண்ணம் (public)
26-May-2020 7:05 pm

#ஊரடங்கில்ஏழையின்நிலை

பந்திக்கு பிந்தினேன்
பசி வயிற்றை கிள்ளியது
பந்திக்கு முந்தினேன் 
மானம் மரியாதையை சீண்டியது!!

பசியா மரியாதையா??
பசியே வென்றது 
மதிப்பும் மரியாதையும் 
தன்னிலை மறந்து மாண்டது!!
ஊரடங்கில் ஏழையின் நிலை!!

மேலும்

சர்மிளா - எண்ணம் (public)
07-May-2020 3:41 pm

காய்ந்த சறுகுகளும் உதவும் நெருப்பு மூட்ட!  நீ நெருப்பாயிரு!

மேலும்

சர்மிளா - சர்மிளா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2020 6:56 pm

என் கருத்துக்களுக்கு 
ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் 
நான் பின்வாங்குவதில்லை!
ஏனென்றால் 
நான் கொள்கைகளால் ஊக்குவிக்கப்பட்டவள்!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே