Twinkle - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Twinkle |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 274 |
புள்ளி | : 6 |
"போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு
மார்பில் சாய்ந்து கண் மூடடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா"
படம் - பாகுபலி 2
வெண்ணைத் திருடனா - இல்லை
வெண்ணிலவே வஞ்சி வடிவெடுத்த
ராதையின் இதயக் கள்வனா
கோகுல கண்ணனை - நீ
கோபியரின் சேலைத் திருடனா
முத்தான மூங்கிலில் முகிலான இதழ் பதித்து
மூவுலகே மயங்கும் இசையால்
அனைவரின் மனம் பறிக்கும்
உன் திருட்டு வேலை முடிந்துவிட்டால்
இருள் சூழ்ந்த இரவில் இருவிழி
இமைமூடி இளைப்பாறு கிருஷ்ணா !
சிலப்பதிகாரம்
வாழ்க்கைப்பாடம் கற்றிட விருப்பமா ?
கதையைவிட சிறந்தவழி ஏதம்மா ?
கதையென்பது நேரங்கடத்தும் அற்பமா ?
சிறு திருத்தம்
அது அழகாய்ச்செதுக்கிய வாழ்க்கைச்சிற்பமம்மா ...
சிறுதுரும்பும் பல்குத்த உதவும்
சிலம்பும் கதைச் சொல்லும் !!!
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மேல்
சிலப்பதிகாரங்கூறும் உண்மையிது கேள் !
அறனென்பதே வாழ்க்கை மூச்சாம்
அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாம்
செயல்களுக்கில்லை காலத்திடம் கடன்
விரைவில் அடைவோம்நம் செய்வினைப்பலன்
இது வெறும் கதையா ?
அறநெறி காட்டும் கீதையா ?
மாற்ற இயலாதது இறந்தகாலம்
மாறக் கூடியது எதிர்காலம்
ம
குழந்தையின் மழலை
பிழைகளின் இசை
குழந்தையின் முதலடி கண்டு
தலைவணங்கும் நாற்றிசை
குழைந்தை மண்ணில் தோன்றிய
புது உதயம்
கடவுளின் இருப்பிடமோ
அதன் இதயம்
புதிதாய் விளைந்த பிஞ்சு
கள்ளம் கபடம் இல்லாதாது
அதன் நெஞ்சு
தாயின் தாலாட்டை கேட்டு
தயங்காமல் துயில்கொள்ளும் மொட்டு !
வாழ்க்கை ஒவ்வொரு நாளும்
புதுப்புது அனுபவங்களைத் தரும்
சிலருக்கு அவை பாடங்களாய் அமையும்
சிலருக்கோ புதுத் தொடக்கமாய் அமையும்
ஒற்றை வரியில் கூறினால்
வாழ்க்கை ஒரு ஆசான் !