சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம்
வாழ்க்கைப்பாடம் கற்றிட விருப்பமா ?
கதையைவிட சிறந்தவழி ஏதம்மா ?
கதையென்பது நேரங்கடத்தும் அற்பமா ?
சிறு திருத்தம்
அது அழகாய்ச்செதுக்கிய வாழ்க்கைச்சிற்பமம்மா ...
சிறுதுரும்பும் பல்குத்த உதவும்
சிலம்பும் கதைச் சொல்லும் !!!
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மேல்
சிலப்பதிகாரங்கூறும் உண்மையிது கேள் !
அறனென்பதே வாழ்க்கை மூச்சாம்
அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாம்
செயல்களுக்கில்லை காலத்திடம் கடன்
விரைவில் அடைவோம்நம் செய்வினைப்பலன்
இது வெறும் கதையா ?
அறநெறி காட்டும் கீதையா ?
மாற்ற இயலாதது இறந்தகாலம்
மாறக் கூடியது எதிர்காலம்
மனதே அனைத்திற்கும் ஆதாரம்
புரிந்ததா வாழ்க்கைப் பாடம் ?