துயில்கொள் கண்ணா

"போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு
மார்பில் சாய்ந்து கண் மூடடா
கண்ணா நீ தூங்கடா
என் கண்ணா நீ தூங்கடா"
படம் - பாகுபலி 2

வெண்ணைத் திருடனா - இல்லை
வெண்ணிலவே வஞ்சி வடிவெடுத்த
ராதையின் இதயக் கள்வனா
கோகுல கண்ணனை - நீ
கோபியரின் சேலைத் திருடனா
முத்தான மூங்கிலில் முகிலான இதழ் பதித்து
மூவுலகே மயங்கும் இசையால்
அனைவரின் மனம் பறிக்கும்
உன் திருட்டு வேலை முடிந்துவிட்டால்
இருள் சூழ்ந்த இரவில் இருவிழி
இமைமூடி இளைப்பாறு கிருஷ்ணா !

எழுதியவர் : twinkle (1-May-17, 8:33 am)
சேர்த்தது : Twinkle
Tanglish : thuyilkol kannaa
பார்வை : 194

மேலே