நைட் ஷிப்ட்

என் முதல் நாள் இது..
உறக்கம் விற்று,
ஊதியம் வாங்கும் பணியில்
என் முதல் நாள் இது !

அல்லி தின்று, கிள்ளிக்கொடுக்கும்..
இந்த கார்ப்பரேட் ஏழைகளுக்காக
கண்விழித்து காசு சேர்க்கிறோம் நாங்கள்.

அங்கு வாடிக்கையாளர் வசதியாய் தூங்க
இங்கு நாங்கள் கொடுப்பனவு பெற்றுக்கொண்டு
கொடு நோய்க்கு ஆளாகிறோம்..
தியாகிகள் அல்லவோ நாங்கள்??

எழுதியவர் : நேதாஜி (3-May-17, 1:20 am)
சேர்த்தது : நேதாஜி
பார்வை : 106

மேலே