துளிப்பாக்கள்சொசாந்தி

#துளிப்பாக்கள்

பிள்ளைத்தாச்சி ஆக்கிவிடுகிறது
இரண்டு மணி நேரத்தில்
பஜ்ஜி / மசால் வடை..!
=============================

சொத்துக்களை அபகரிக்கிறது
பத்திர பதிவின்றி
தனியார் மருத்துவமனை..!
=============================

குப்புற படுத்தது
வயிற்றுக்கு ஏதுமின்றி
குடங்கள்..!
=============================

கண்ணெதிரே ஓடை
கோடையில்
கானல்..!
=============================

ஒரு கதவு மூடினால்
இன்னொரு கதவு திறக்கிறது
டாஸ்மாக்..!
=============================

தரை தட்டியது
கைகொட்டி சிரிக்கிறது
தக்கை..!
=============================

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (28-Apr-17, 10:49 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 79

மேலே