Vijayanmfc - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Vijayanmfc |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 07-Apr-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 6 |
கொஞ்சம் போல் தமிழ் ஆர்வம், படித்த அளவிலே தான் தமிழ்.
உறவுக்கும்.. துறவுக்கும்..
வெறுமைக்கும்.. ஒருமைக்கும்..
இல்லாமைக்கும்.. இயலாமைக்கும்..
இரக்கத்திற்கும்.. பரிதாபத்திற்கும்..
அடக்கத்திற்கும்.. அமைதிக்கும்..
ஆயிரமாயிரம் காரணங்கள்
இருக்கப் போவதில்லையே..
அவை யாவும் என்றோ
ஒதுக்கியும் ஒடிக்கியும் விடப்பட்ட
அந்த ஒரு கீழ்நிலை தான்....
காரிய ஷித்தி யாவும்
அவன் மேல் பாரமேற்றி
எவன் செய்த தவமோ
ஈகை கொண்ட வரமோ
நாவினுள் வடிவாய் ஏற்றி
அறம் மிக்க கொடையால்
வளை நீண்ட முகடினுள்
மோட்சம் நாடி சுவாசித்து
தந்த வினை முடியா
அரண் தகர்ந்து நோக்கினும்
அவன் சித்தம் மேலோங்கியதாய்
என்று தீர்ப்பாய் யாசகனே
பனி கரைந்த ஆதவனே
அழைத்திட விழைய வருகவே...
பாலைவன பூமியின் அமைதியே அதன் ஆயுதம்
வறண்ட பிரதேசத்தின் அழகே அதன் விரிசல்
காரணமின்றி வற்றிக் கிடப்பதில்லை பாலை
பசுமையின்றி வெடித்து கொள்வதில்லை நிலம்
பிறழ்ந்து போன மனதினுள் ஊறிப் போனது
தாழ்ந்து விட்ட காயச்சுவடினுள் இறுகிய கணமிது.
விண் தீட்டிய வரிகளால் விலகிக்
கொண்டதே வாழும் தினம்..
வீசியது தென்றலா புயலா என கணித்துக் கொள்வதில்லை வளர்ந்துயர்ந்த பசும்மரம்..