சத்யப் பிரியா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சத்யப் பிரியா |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 07-Nov-1984 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 1375 |
புள்ளி | : 270 |
வணக்கம் நண்பர்களே..என்னை பற்றி சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை மனிதம் நிறைந்த மனித பிறவி என்பதில் பெருமை கொள்கிறேன்.. உங்களுக்கான சில வரிகள்.
.காலத்திற்கு எல்லை கொடுக்காதீர்கள்
முதுகெலும்பு உள்ளவரை முயற்சி செய்வீர்..
தொடர் முயற்சி தோற்காது என்பதில் நம்பிக்கை வைப்பீர்.
.வணக்கம்.மேலும் என் படைப்புகளை காண வருகை தாருங்கள்..www.kavithayinisathya.blogspot.com then share ur commands with this id sridhikshana@gmail.com
இப்பொழுதெல்லாம்.........
நீ
உடன்வராத வாகனப் பயணம்
கால் நடை பயணத்தை விட களைப்பாகிறது.......
நீ
இல்லாத என் வீட்டு அறை
வெறுமையை உள் வாங்கிக் கொண்டிருக்கிறது........
நீ
கொடுக்க மறுத்த
சுவாசத்தால் என் நுரையீரல்
செயலிழக்கிறது.....!
மரங்களை வெட்டி எடுத்த
வேர்களின் விசும்பல் சத்தம்
தூக்கத்தை கலைக்கிறது
கட்டில் கால்கள் இருந்து வரும்
மெல்லிய சத்தங்களால்.........!
மரங்களை வெட்டி எடுத்த
வேர்களின் விசும்பல் சத்தம்
தூக்கத்தை கலைக்கிறது
கட்டில் கால்கள் இருந்து வரும்
மெல்லிய சத்தங்களால்.........!
கள்ளமில்லா ஆதி நிர்வாணம் அசிங்கமில்லை
அவசரமாய் கிடைத்த நாகரீகத்தில்
நிர்வாணம் மறைத்து
அசிங்கமானான் மனிதன் ...!
செவிப்பறையில் பனிக்கட்டியாய்
உன் வார்த்தைகள்
ஆயினும் தவிப்பு தீர்ந்தபாடில்லை
சம்மதம் என வந்தால்
சண்டையிட.....
விலகி போனால் விரட்டி பிடிக்க
இப்படியாகி தொடர்கிறது
உன்னோடும் சில வசந்த காலம்.....
என் கையிலுருந்த வார்த்தைகள்
சிதறி ஓடுகின்றன
என்னை அறியாமலே.....
செப்பனிடப்பட்டு பேச தெரியவில்லை
தவறிய வார்த்தைகளில்
எல்லாம் முடிந்துவிடும் அபாயம்
நெறித்துக்கொண்டு நிற்கிறது .....
இடம் பொருள் ஏவல் தவிர
அத்தனையும் அறிகிறது என் அவசரப்புத்தி ....!
சுயம் கரைந்து
கல்லான பின் தான்
மெய் தீண்ட ராமன் வருவான் எனில்
அகலிகை பட்டத்தோடு
வாழ்ந்து விட்டு போகிறேன்.....!
அவளை நினைக்க
கற்றுக் கொண்ட பிறகு தான்
மனப்பாட சக்தியை என்னுள் உணர்ந்தேன்.
.
படிக்காமலே தேர்வெழுதும்
கற்பனை யுக்தி தான் பின்னாளில்
அவளுக்கான
கவிதையை படைத்தது..
பார்க்கும் போது புன்னகைத்தவள்..
என்னை பார்த்தால் மட்டுமே
புன்னைகைக்க தொடங்கினாள்
காதலை அறியாத வயதில்
அவள் நட்பே எனக்கு
காதலாகி போனது..
படிக்க மறந்து
அவளோடு சுற்றி திரிந்ததும்
தேர்வறையில் யாரும் பார்க்காத போது விடைத்தாளை மாற்றிக்கொண்டதும்...
நீயின்றி நானில்லை
என விடுமுறை நாட்களில்
கடிதம் மாற்றிக் கொண்டதும்..
பெருங்குற்றம் என அஞ்சி
யாரும் அறியா வண்ணம்
கன்னக்குழியில் முத்தமிட்டுக் கொண்டதும்..