அவளுடனான என் நட்பு

அவளை நினைக்க
கற்றுக் கொண்ட பிறகு தான்
மனப்பாட சக்தியை என்னுள் உணர்ந்தேன்.
.
படிக்காமலே தேர்வெழுதும்
கற்பனை யுக்தி தான் பின்னாளில்
அவளுக்கான
கவிதையை படைத்தது..

பார்க்கும் போது புன்னகைத்தவள்..
என்னை பார்த்தால் மட்டுமே
புன்னைகைக்க தொடங்கினாள்

காதலை அறியாத வயதில்
அவள் நட்பே எனக்கு
காதலாகி போனது..

படிக்க மறந்து
அவளோடு சுற்றி திரிந்ததும்
தேர்வறையில் யாரும் பார்க்காத போது விடைத்தாளை மாற்றிக்கொண்டதும்...

நீயின்றி நானில்லை
என விடுமுறை நாட்களில்
கடிதம் மாற்றிக் கொண்டதும்..

பெருங்குற்றம் என அஞ்சி
யாரும் அறியா வண்ணம்
கன்னக்குழியில் முத்தமிட்டுக் கொண்டதும்..

நியாபக செடியில் மலர்களாய்
பூத்தும் உதிர்ந்தும்
வாழ்வோடு பயணித்து கொண்டிருக்கும்
அந்த நினைவுகளை

எங்கோ இருக்கும் அவளும்
சுமந்து கொண்டிருக்கலாம்
வாழ்வின் சுமையோடு சேர்த்து..

எழுதியவர் : kavithayini (30-Jul-13, 12:15 pm)
பார்வை : 349

மேலே