என்னை அறியாமல்

என் கையிலுருந்த வார்த்தைகள்
சிதறி ஓடுகின்றன
என்னை அறியாமலே.....
செப்பனிடப்பட்டு பேச தெரியவில்லை
தவறிய வார்த்தைகளில்
எல்லாம் முடிந்துவிடும் அபாயம்
நெறித்துக்கொண்டு நிற்கிறது .....
இடம் பொருள் ஏவல் தவிர
அத்தனையும் அறிகிறது என் அவசரப்புத்தி ....!

எழுதியவர் : கவிதாயினி (4-Aug-14, 10:42 am)
Tanglish : ennai ariyaamal
பார்வை : 86

மேலே