என் ஆச மவனே

(ஊர் ஆளுக பார்த்துகிட்டுருக்கும்
வேளையில கல்யாணமானபிறகு
தாய பிறிஞ்சு மகன்
போகும் போது தாயிடமிருந்து வந்த
வற்றி போன வார்த்தைகள்)

என்னென்ன செஞ்சே(ன்)
உன்னல்ல நெனச்சே(ன்)
உசுருன்னு வச்சே(ன்)
பெத்தவளையே வயித்துக்கு
வத்தவளா ஆக்கினாயே!

வயவரப்பு ஏறுனா
வலிதாங்க மாட்டியேனு
வசந்தமா வாழவச்சே(ன்)
வயித்துல வச்சவள
வக்கத்தவளா வாழவச்சுட்ட

அருவாமன அறுக்கும் போதும்
அம்மிகல்லு அரைக்கும் போதும்
அருகாமையில அண்டுனா
படிப்பு சரஸ்வதி
பக்கத்துல வராதுன்னு
பட்டிணத்துல படிக்க வச்சே(ன்)

பட்டண்த்துல படிச்சதால
பக்குவம் வந்து சேரணும்னு
பத்து மைல் நடந்து
பரிகாரம் பண்ணினே(ன்)

இத்தனையும் செஞ்ச
இந்த செவுட்டு கிழவிக்கு
ஒத்த வயித்துக்கு
ஒல வச்சு போடுனுமின்னு
ஒரு முற(க்) கூட தோனலையே

வயசு வளந்துடுச்சி
வாழ்க்கை வெறுத்துடுச்சி
எளமையும் ஏறிடிச்சி
என் நினைச்சி
கரிசகாட்டு ஊருக்குள்ள
கண்டவன் கண்ணு
படுமுன்னு தோன


பஸ்டாண்டுல நின்னே(ன்)
பட்டணம் போன(ன்)
பம்பரமா சுத்துனே(ன்)
பாத்தேன் ஒரு பொண்ண
பட்டுன்னு முடிச்சே(ன்)


நடந்துச்சி கல்யாணம்
நார்னிச்சி எம்பொழப்பு
வந்தவ வாய்பேச்ச கேட்டுகிட்டு
வயித்துல அடிச்சிட்டு
பட்டணத்துக்கு போறியே
உனக்கிது அடுக்குமா
உலகத்துக்கிது பொறுக்குமா?

போப்பா! போ!
கடைசியா ஒன்னு என்
கட்டை வேகுமுன்ன
காது கொடுத்து கேளு

மாடா ஒலச்சி
ஓடா போயிட்டே(ன்)
ஒம்புள்ள இது போல
ஒனக்கு ஒன்னு(ம்) செய்யாம
பாத்துக்கடா என் ஆச மவனே!!

எழுதியவர் : மனோஜ் (4-Aug-14, 10:53 am)
சேர்த்தது : மனோ பாரதி
பார்வை : 96

மேலே