காவலன்

முத்தத்தால் என்னை
பித்தன் ஆக்கியவளே!
முத்துபோல் நீயிருக்க -உனக்கு
ரத்தமாய் நானிருப்பேன்

காலடிச் சுவடுகள் எல்லாம்
கவிதைகள் சொல்லும் -அது
கற்பனையை மிஞ்சும்
கன்னக்குழி அழகில் என்னை
கவிஞன் ஆக்கியவளே!

காந்தப் பார்வையால் என்னை
கடிகாரம் போல் சுழலவைத்தாய்
உறங்கிக் கொண்டிருந்த
உயிரை உசுப்பிவிட்டாய் -என்
உணர்வை விழிக்க செய்தாய்

கருங்கூந்தலில் என்னை
கவர்ந்து ஈர்த்தவளே! -உன்
இதய தோட்டத்தில் ஓர்
இடம் கொடு....
காலமெல்லாம் நானிருப்பேன் -உன்
காவலனாக ..........

எழுதியவர் : manoj (4-Aug-14, 10:58 am)
சேர்த்தது : மனோ பாரதி
Tanglish : kaavalan
பார்வை : 425

மேலே