தேடிப் பார்த்து அறியப் போவதில்லை தனிமை

உறவுக்கும்.. துறவுக்கும்..
வெறுமைக்கும்.. ஒருமைக்கும்..
இல்லாமைக்கும்.. இயலாமைக்கும்..
இரக்கத்திற்கும்.. பரிதாபத்திற்கும்..
அடக்கத்திற்கும்.. அமைதிக்கும்..
ஆயிரமாயிரம் காரணங்கள்
இருக்கப் போவதில்லையே..
அவை யாவும் என்றோ
ஒதுக்கியும் ஒடிக்கியும் விடப்பட்ட
அந்த ஒரு கீழ்நிலை தான்....