வெறுமை

தனிமை மீது
தணியாத மோகம்
பின்னோக்கி செல்ல
தொடங்கி விட்டேன்
புதைந்து போன
நினைவுகளையும்
காணாமல் போன
கனவுகளையும்
தேடுகிறேன்
ஓடி களைத்தது
கடிகாரமுள்
நதியில்
மணல் பரப்பு
தெரிய தொடங்கிவிட்டது
வெறுமையை சுமந்து...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (7-Feb-14, 10:09 am)
Tanglish : verumai
பார்வை : 107

மேலே