சுந்தரி விஸ்வநாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுந்தரி விஸ்வநாதன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Dec-2013
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  79

என் படைப்புகள்
சுந்தரி விஸ்வநாதன் செய்திகள்
சுந்தரி விஸ்வநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2017 5:20 pm

காதலி முந்தானையில்
ஒளிந்து மழையை ரசிக்கும்
காதலனை ஒத்திருந்தது
அந்த மழை நேரத்து மேகத்தில்
ஒளிந்த நிலவு...

மேலும்

சுந்தரி விஸ்வநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2014 8:03 pm

கானல் நீரில்
மிதந்து செல்லும்
படகு போல
தோன்றுகிறது
ஆற்றுப்படுகையில்
மணல் அள்ளும் லாரியை
பார்க்கும்போதெல்லாம்...

மேலும்

சுந்தரி விஸ்வநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2014 9:46 pm

வார்த்தையில்
வைக்க மறந்த
புள்ளியை வைத்து
மறைத்துத்தான்
வைத்திருந்தேன்
மற்றவர்கை சேரா
நம் காதலை...

மேலும்

சுந்தரி விஸ்வநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2014 1:59 pm

உன் விழியின் கனவுகளை
விரலால் நிறைத்தேன்
பூவாய் மலர்ந்தது கவிதை
கனவுகளையெல்லாம்
கவிதையாக்கும்
வகையிருந்தால்
நட்சத்திரங்களுக்கு
இடம் இருக்காது
நிலவாக நீ உலவும் வானத்தில்...

மேலும்

நல்ல கரு !! நல்ல கருத்து !!! கொஞ்சமும் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பின் அட்டகாசமான பதிப்பு !! வாழ்த்துக்கள் !! 23-Mar-2014 3:02 pm
சுந்தரி விஸ்வநாதன் - சுந்தரி விஸ்வநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2014 10:28 am

எனக்குள்ளிருந்த
உணர்வின் உயிர்ப்புக்களை
உலுக்கியெழுப்பினாய்
விழித்து நானெழுகையில்
விடைகொடு என்கிறாய்
நிலவுமிழும் ராத்திரிகளில்
நீள நடந்தலைந்து
உணர்வுகளைத் தேடி
உறைந்து போயிருந்தேன்
நெஞ்சினில்
கனக்கும் நினைவுகள்
இமை விளிம்பு ஈரம்
என் விழியுடைப்பிற்காகத்தான்
காத்திருக்கிறதென்பது
தெரியும்
கொட்டும் பனியும்
கருக்கும் வெயிலுமில்லாத
ஒரு ஆரம்பம்...

மேலும்

நன்றிகள் :) 24-Jan-2014 11:13 am
எழுதியது யார் எனப் பாராமல் படித்தேன். அனுசரண் கவிதை நடை தெரிந்தது. ஆனாலும் சற்று தெளிவான வித்தியாசம். உணர்வுகள்--உச்சியில். 24-Jan-2014 11:10 am
சுந்தரி விஸ்வநாதன் - சுந்தரி விஸ்வநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2013 8:41 pm

நதியோடு பயணிக்க
கடல் வந்து சேர்ந்தது
கடலோடு பயணிக்க
கண்டங்கள் தெரிந்தது.
பெரிதாக இருந்த உலகம்
சிறு புள்ளியானது
இயற்கை எல்லாவற்றையும்
கர்ப்பத்திலிருந்து காலவெளிக்கு
பரிசளித்துப் போகின்றது
மனித மனம் மட்டும்
இயற்கையை விட்டு
இயந்திரத்துடன்....

மேலும்

இயற்கையோடு மனிதன் இணைந்து விட்டான் மனித நேயத்தை தொலைத்து விட்டான்..... கவிஞரே முடிவு சரிதானே .....! நல்ல கவிதை அருமை ...! வாழ்த்துக்கள் ...! 26-Dec-2013 8:50 am
ஆமாம் :) @குமரிப்பையன் 25-Dec-2013 6:48 am
செயற்கை தந்த கோலம்.. இயற்கையோ அலங்கோலம்..! 24-Dec-2013 8:57 pm
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2013 11:50 am

எழுத்தில் என் பாதை..!

ஜூலையில் ஒரு பெயர் பதித்தாய்..
ஆகஸ்ட்டில் அடியெடுத்து வைத்தாய்..
கடைபல விரித்தாய் காண்பாரில்லை
கவிப்பலத் திரித்தாய் கேட்பாரில்லை..!

எழுத்தில் உனக்கோர் புகலிடம் வேண்டி
எழுத்தை தொடர்ந்தாய் படித்தனர் சிலரும்
எழுந்து பார்த்தாய் அணைத்தனர் பலரும்
எடுத்தாய் அவர்தம் உள்ளம் அன்பாய்..!

புனைந்த எழுத்தில் நல்லதை விதைத்தாய்
புரிந்தனர் உன்னை நலமென ஏற்றனர்
புதியவர் வரவை புன்முறுவல் செய்தாய்
புகுந்தாய் எழுத்தில் இகழ்ந்தார் இல்லை..!

குறைகள் சொன்னதும் குற்றம் திருத்தி
குறைத்தாய் குறையை தின்றாய் நீயே
கவிஞர் வாழும் இனிய தளத்தில்
அறிஞரும் அறிய பவனி வந்தாய்..!

மேலும்

வருகைக்கு நன்றிகள் நட்பே..! நட்புடன்குமரி 27-Dec-2013 7:45 pm
வருகைக்கு நன்றிகள் நட்பே..! நட்புடன்குமரி 27-Dec-2013 7:45 pm
உங்கள் கணிப்பும் சரியே அறிஞரே..! அவை அடக்கமும் அடுத்தவரும் நான் கண்ட சுவை காண விருப்பமும் சேர்ந்து பதித்தது..! உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றிகள்..! நட்புடன் குமரி. 27-Dec-2013 7:44 pm
வாழ்த்துகள் நண்பரே 25-Dec-2013 7:47 pm
சுந்தரி விஸ்வநாதன் அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Dec-2013 8:10 am

கோடை காலத்து
மெலிந்த ஓடையாய்
உன் நினைவுகளாய்
நான்.

மேலும்

arumai 30-Dec-2013 8:26 pm
புதிய நட்பே வருக..! புதிய படைப்புகள் தருக..! உங்கள் கற்பனையில் முதல் பதிவு காதல் நினைவோடு..! நன்று.. தொடருங்கள்..! வாழ்த்துக்கள்..! நட்புடன் குமரி 24-Dec-2013 3:39 pm
அருமை 24-Dec-2013 1:30 pm
அருமை 24-Dec-2013 12:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

இவர் பின்தொடர்பவர்கள் (21)

இவரை பின்தொடர்பவர்கள் (21)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே