மொபைல் உலகம்

நதியோடு பயணிக்க
கடல் வந்து சேர்ந்தது
கடலோடு பயணிக்க
கண்டங்கள் தெரிந்தது.
பெரிதாக இருந்த உலகம்
சிறு புள்ளியானது
இயற்கை எல்லாவற்றையும்
கர்ப்பத்திலிருந்து காலவெளிக்கு
பரிசளித்துப் போகின்றது
மனித மனம் மட்டும்
இயற்கையை விட்டு
இயந்திரத்துடன்....

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (24-Dec-13, 8:41 pm)
Tanglish : mobile ulakam
பார்வை : 224

மேலே