ஏன் இப்படியெல்லாம்
கடிகாரம் நொடிக்கொருமுறை
முள் பார்துகொள்கிறது !
எங்கே எழுந்துவிடுவளோ என்ற
கதகதப்பில் தலையணைகள் !
கம்பளிக்கும் குளிர் தொற்றிக் கொள்கிறது
அவளை பிரிம்போது !
குளிர்சுரமே வந்திவிடும்போல் தண்ணீருக்கு
அவள் தொடுவதை எண்ணி !
கண்ணாடியும் முகம் பார்த்துக் கொள்கிறது
தினமும் அவள்முன்னால் !
திரைசீலைகள் ஆடுகிறது
தன்னைமறந்து அவளை நினைத்து !
வாசற்படி தெருவரை சென்று திரும்புகிறது
அவளை வழியனுப்ப !
இடம்பிடித்து வைக்கிறது
பேருந்தின் சன்னல்ஓரம் !
யாருக்கோ வங்கிசெல்லும் பூங்கொத்து
வாழ்த்து சொல்லிபோகிறது !