நட்பே வா~ நீயும் விருதை வெல்லு~ குமரிபையன்

எழுத்தில் என் பாதை..!

ஜூலையில் ஒரு பெயர் பதித்தாய்..
ஆகஸ்ட்டில் அடியெடுத்து வைத்தாய்..
கடைபல விரித்தாய் காண்பாரில்லை
கவிப்பலத் திரித்தாய் கேட்பாரில்லை..!

எழுத்தில் உனக்கோர் புகலிடம் வேண்டி
எழுத்தை தொடர்ந்தாய் படித்தனர் சிலரும்
எழுந்து பார்த்தாய் அணைத்தனர் பலரும்
எடுத்தாய் அவர்தம் உள்ளம் அன்பாய்..!

புனைந்த எழுத்தில் நல்லதை விதைத்தாய்
புரிந்தனர் உன்னை நலமென ஏற்றனர்
புதியவர் வரவை புன்முறுவல் செய்தாய்
புகுந்தாய் எழுத்தில் இகழ்ந்தார் இல்லை..!

குறைகள் சொன்னதும் குற்றம் திருத்தி
குறைத்தாய் குறையை தின்றாய் நீயே
கவிஞர் வாழும் இனிய தளத்தில்
அறிஞரும் அறிய பவனி வந்தாய்..!

தரமிகு கவிதைகள் படித்து கொண்டாய்
தந்த கருத்தை மென்று நீவளர்ந்தாய்
மாற்றார் நிறைவை கருத்தாய் தந்தாய்
மாறும் கருத்தை மறைத்து சொன்னாய்..!

இன்று...
விருதை பெற்றாய் நல்லறிஞர் கையால்
விலைமதிப்பில்லா முதலாம் விருதாம்
விளைக்க வேண்டும் உன்னில் என்றும்
விதைகள் முளைக்கும் விரும்பும் வரிகள்..!

என்னை நான் விலக்கி பார்த்தேன்..!
நட்புடன் குமரி பையன்.

எழுதியவர் : குமரி பையன் (20-Dec-13, 11:50 am)
பார்வை : 403

மேலே