அரவிந்தன்078 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அரவிந்தன்078
இடம்:  chennai
பிறந்த தேதி :  07-Mar-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Apr-2015
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துணை மேலாளராக இருக்கிறேன்.
நல்ல வாசகன் ஆக விருப்பம் கொண்டிருக்கிறேன்.
பழந்தமிழ் இலக்கியங்கள், கதைகள், கட்டுரைகள், போன்றவற்றில் ஆர்வம் உண்டு.
பணியின் காரணமாக அயல் நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் இது போன்ற இணைய தொடர்புகளே உற்ற நண்பனாக இருக்கிறார்கள்.

என் படைப்புகள்
அரவிந்தன்078 செய்திகள்
அரவிந்தன்078 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 12:21 pm

நாட்கள் செல்லலாம்,
நரை கூடலாம்,
மனம் இளமையானால்,
மதி கூர்மையானால்,
இறுமாப்பு தவிர்த்து,
ஈகையோடு வாழ்ந்தால்,
- நீயும் நிரந்தரமானவனே!

மேலும்

அடடா உண்மைதான் ........ 26-May-2015 9:06 pm
மனம் இளமையானால் எல்லாம் இனிமைதான் அருமை வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 26-May-2015 8:54 pm
அரவிந்தன்078 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 12:06 pm

"அவரது சொந்தங்கள்" - பொள்ளாச்சி அபி.

படைப்பாளிகளான எழுத்தாளர்கள் பற்றிய அருமையான, நிதர்சனமான படைப்பு, இந்த கதை.

அறுதியிட்டு கூற முடியாத காலம், ஒரு மனிதனின் அந்திமக் காலம். தன் வாழ்நாள் முழுவதும் ஒருவன் கடந்து வந்த பாதைகளும், ஏறிய படிக்கட்டுகளும் முற்று பெரும் இடம், அவனது மரணத் தருணம்.

வாழ்நாளில் தான் படைத்து உலாவ விட்ட கதாபாத்திரங்கள் பற்றிய நினைவுகள் மட்டும்தான் எழுத்தாளர் ஞானபாரதிக்கு மிச்சமானது, என்கிற சாரம்தான் அபி அவர்கள் எழுதிய "அவரது சொந்தங்கள்".
இந்த கதையில் அபி அவர்கள் கையாண்டிருக்கும் நடை ஒரு ஊர்வன போன்றது, மெதுவாக அதே நேரம் நிலையாக சிறு ஓட்டம் கொண்டிருப்பது.
தனக்கென்று

மேலும்

அரவிந்தன்078 - அரவிந்தன்078 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 6:52 am

காட்டில் மட்டுமல்ல
நாட்டிலும் வாழ்கிறார்கள்
வரிக்குதிரைகள்
நாட்டை தோள்களில் சுமக்கும்
தொழிலாளிகள் என்னும்
'வரி' குதிரைகள்.
மெல்ல மெல்ல இவர்கள்
மாறி வருகிறார்கள்
பொதிக் கழுதைகளாக.

மண் வளமது இழந்தாச்சு,
விவசாயியும் நொடிஞ்சாச்சு,
சேற்று நிலத்தையும் வித்தாச்சு,
சோத்துக்கு சிங்கி அடிச்சாச்சு.
இனி நிரந்தர,
சங்கு ஊதுவதற்க்கு முன்னே,
சிவக்கட்டும் உன் விழிகள்
பறக்கட்டும் தீப்பொறிகள்
புறப்படட்டும் தமிழ் இனங்கள்!

மேலும்

கருத்துகள்

மேலே