காட்டில் மட்டுமல்ல நாட்டிலும் வாழ்கிறார்கள் வரிக்குதிரைகள் நாட்டை தோள்களில்...
காட்டில் மட்டுமல்ல
நாட்டிலும் வாழ்கிறார்கள்
வரிக்குதிரைகள்
நாட்டை தோள்களில் சுமக்கும்
தொழிலாளிகள் என்னும்
'வரி' குதிரைகள்.
மெல்ல மெல்ல இவர்கள்
மாறி வருகிறார்கள்
பொதிக் கழுதைகளாக.
மண் வளமது இழந்தாச்சு,
விவசாயியும் நொடிஞ்சாச்சு,
சேற்று நிலத்தையும் வித்தாச்சு,
சோத்துக்கு சிங்கி அடிச்சாச்சு.
இனி நிரந்தர,
சங்கு ஊதுவதற்க்கு முன்னே,
சிவக்கட்டும் உன் விழிகள்
பறக்கட்டும் தீப்பொறிகள்
புறப்படட்டும் தமிழ் இனங்கள்!