ஸ்ரீவை சின்ன கண்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீவை சின்ன கண்ணன்
இடம்:  Tirupur
பிறந்த தேதி :  05-Jul-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Dec-2017
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  3

என்னைப் பற்றி...

எழுத்துலகில் ஓர் கிறுக்கன்...

என் படைப்புகள்
ஸ்ரீவை சின்ன கண்ணன் செய்திகள்
ஸ்ரீவை சின்ன கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2020 12:44 pm

மாணவனாக ஆசை பள்ளி

மாணவனாக ஆசை

தோளோடு தோள் கொடுத்த தோழமையுடன்

தொலைதூரம் தொலைந்து போக ஆசை

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி

குட்டி கரணம் அடித்து குட்டி ஆற்றில்

குதூகலமாய் குளிக்க ஆசை

வகுப்பு நேரத்தில் வகடு எடுத்த தலையுடன் நெற்றியில்

வண்ணமாய் தேசிய கொடிபோல் திருமண் இட்டு

கோவிலுக்கு சென்று வந்த்தாய் பொய்யுரைத்து அனைவருக்கும்

பிரசாதம் கொடுப்பதாக கூறி வகுப்புக்கு முழுக்கு போட ஆசை

கணக்கு வாத்தியாரின் காலனியை காணாமல் போக வைத்து

கணக்கு வகுப்பை காலனி தேடும் வகுப்பாக மாற்ற ஆசை

வாய்ப்பு கிடைத்தும் செய்யாமல் இருந்த வசை செயல்களை

வாய்ப்பாக செய்ய ஆசை

ஆசை

மேலும்

ஸ்ரீவை சின்ன கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2020 12:35 pm

சரணங்களின்
பொருள்
மாறுவதால்
தவறாகிப் போகும்
கீதங்கள்

எய்ட்ஸ் அரக்கனின்
சிறைப் பறவைகளாய் . . .
சில்லறைக் கனவுகளாய். .
மரண மேடையில்
மணம் இழந்த
மலர்களாய்
மனிதர்கள் சில … !!!

நாளைய
இந்தியாவை
நொறுக்கி போட துடிக்கும்
இன்றைய

‘இராவணன்’

மனிதத்துக்கும்
மருத்துவத்துக்கும்
நிர்ணியக்கப்பட்ட
மரண சவால்….. !!!

இலக்கற்ற
தடுமாற்றங்களில்
விளையும்
இயல்பற்ற
நரக வாழ்கை . . . . !!!

உடல் ஆசைகளையும்
உணர்ச்சிக்கு கலவரங்களையும்
உரசி
உயிரை பற்றவைக்கும்
ஊழித் தீ ! . . .

உணர்ந்தும்
உணராமலும்
செய்யும்
தப்புகளுக்கு
மீட்பே அளிக்காமல்
விரும்பி வரும் வேண்டாத
நோய் அரக்கன்

மேலும்

ஸ்ரீவை சின்ன கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2020 12:32 pm

காலையில்
சாலையில்
கலங்க வைக்கும் விபத்து,
விபத்தின் மடியில் ஒருவன்..
லிட்டர் ரத்தம் ஆறாய் ஓட
நூறு பேர் கூடி "108 " அழைத்தும்
நூறு நிமிடம் ஆகியும் வரவில்லை "108 "
இறுதியில் வந்தது, இறுதியானது மூச்சி .
உச்சு..... உச்சு .... என்று உச்சு கொட்டி விட்டு
"யாரு பெத்த புள்ளையோ" என்று ஒற்றை வார்த்தையை ஒருமையில் உதிர்த்து விட்டு..
கிளாமிப்பிநான் ன் ன் அங்கிருந்து. .
போலியான மனிதாபிமானம்,
மானம் கெட்ட மனிதாபிமானம். . .

மேலும்

கருத்துகள்

மேலே