”பகுத்தறிவு பகலவர்களே

சரணங்களின்
பொருள்
மாறுவதால்
தவறாகிப் போகும்
கீதங்கள்

எய்ட்ஸ் அரக்கனின்
சிறைப் பறவைகளாய் . . .
சில்லறைக் கனவுகளாய். .
மரண மேடையில்
மணம் இழந்த
மலர்களாய்
மனிதர்கள் சில … !!!

நாளைய
இந்தியாவை
நொறுக்கி போட துடிக்கும்
இன்றைய

‘இராவணன்’

மனிதத்துக்கும்
மருத்துவத்துக்கும்
நிர்ணியக்கப்பட்ட
மரண சவால்….. !!!

இலக்கற்ற
தடுமாற்றங்களில்
விளையும்
இயல்பற்ற
நரக வாழ்கை . . . . !!!

உடல் ஆசைகளையும்
உணர்ச்சிக்கு கலவரங்களையும்
உரசி
உயிரை பற்றவைக்கும்
ஊழித் தீ ! . . .

உணர்ந்தும்
உணராமலும்
செய்யும்
தப்புகளுக்கு
மீட்பே அளிக்காமல்
விரும்பி வரும் வேண்டாத
நோய் அரக்கன் . . . !

மனிதத்துக்கும்
மிருகத்திற்கும் இடையிலிட்ட
நூலிழையாம்
பகுத்தறிவை
பதம் பார்க்கும்
பாதகன்!!!!

மனிதமே !
மனிதமே !
உன்னை தராசிலிட்டு
சீர்தூக்கிப் பார்க்க
ஒரு நிமிடமேனும் ஒதுக்கி
பகுத்தறிவு பகலவனுக்கு
உன் இதய வாசலை திறந்து வை !!!

உன் ஆற்றலையும்
ஆர்வத்தையும்
நல்வழியில்
நடத்தி வாழ்கை கனியை
சுவைக்க
கற்று கொள்

காலம் உனக்கு
காதலையும்
காமத்தையும்
தெளிவு படுத்தும். . .

வாழ்கையை
காதலிக்க கற்று கொள்
காமம் தானே
முன்வந்து
எல்லை இட்டு கொள்ளும் . . !

இறைவன் தந்த பரிசான
உடலையும்
உயிரையும், வாழ்க்கையையும்
”உயர்” நிலை படுத்தி கொள்

ஆயின்

பகுத்தறிவு
நிரம்பி
மனிதத்துவம்
உயிர் பெறட்டும்
மகத்துவமாய்
ஜெகம் ஆளட்டும் . . . !!!

எழுதியவர் : --ஸ்ரீவை.சின்ன கண்ணன். (4-Mar-20, 12:35 pm)
பார்வை : 498

மேலே