மானம் கெட்ட மனிதாபிமானம்

காலையில்
சாலையில்
கலங்க வைக்கும் விபத்து,
விபத்தின் மடியில் ஒருவன்..
லிட்டர் ரத்தம் ஆறாய் ஓட
நூறு பேர் கூடி "108 " அழைத்தும்
நூறு நிமிடம் ஆகியும் வரவில்லை "108 "
இறுதியில் வந்தது, இறுதியானது மூச்சி .
உச்சு..... உச்சு .... என்று உச்சு கொட்டி விட்டு
"யாரு பெத்த புள்ளையோ" என்று ஒற்றை வார்த்தையை ஒருமையில் உதிர்த்து விட்டு..
கிளாமிப்பிநான் ன் ன் அங்கிருந்து. .
போலியான மனிதாபிமானம்,
மானம் கெட்ட மனிதாபிமானம். . .

எழுதியவர் : --ஸ்ரீவை.சின்ன கண்ணன். (4-Mar-20, 12:32 pm)
பார்வை : 476

மேலே