நன்றியுரை
மாணவனாக ஆசை பள்ளி
மாணவனாக ஆசை
தோளோடு தோள் கொடுத்த தோழமையுடன்
தொலைதூரம் தொலைந்து போக ஆசை
குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி
குட்டி கரணம் அடித்து குட்டி ஆற்றில்
குதூகலமாய் குளிக்க ஆசை
வகுப்பு நேரத்தில் வகடு எடுத்த தலையுடன் நெற்றியில்
வண்ணமாய் தேசிய கொடிபோல் திருமண் இட்டு
கோவிலுக்கு சென்று வந்த்தாய் பொய்யுரைத்து அனைவருக்கும்
பிரசாதம் கொடுப்பதாக கூறி வகுப்புக்கு முழுக்கு போட ஆசை
கணக்கு வாத்தியாரின் காலனியை காணாமல் போக வைத்து
கணக்கு வகுப்பை காலனி தேடும் வகுப்பாக மாற்ற ஆசை
வாய்ப்பு கிடைத்தும் செய்யாமல் இருந்த வசை செயல்களை
வாய்ப்பாக செய்ய ஆசை
ஆசை பட்ட அனைத்தும் கிடைக்குமா இனி ?
கையில் ஆசை சாக்லேட் உடன் விழித்து எழுந்தேன்
என் பள்ளி பழைய மாணவர்கள் 25ம் ஆண்டு விழாவில்
ஏம்பா நீ தான் நன்றியுரை என்று கூறும் போது.
கண்ணீர் மல்க நன்றியுரை (கண்ணீர்யுரையாக....)