eraaedwin - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : eraaedwin |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
eraaedwin செய்திகள்
கவனமற்று
நீ அழித்துக் கொண்டிருக்கும்
என் குறுஞ்செய்திகளில்
ஏதோ ஒன்றில்
என் உசிரை அனுப்பியிருக்கக் கூடும் நான்
ஐஸ்கிரீம் கேட்கும்
மகளிடம் சொல்லலாம்
”வேண்டாம் டான்சில் வரும்”
பைவ் ஸ்டார் கேட்கும்
மகனிடம் சொல்லலாம்
வேண்டாம்
”பல்லில் சொத்தை விழும்”
இருவரும்
கொஞ்சம் இறங்கி வந்து
வெங்காய பஜ்ஜியில் நின்றாலும்
சொல்லலாம்
”வேண்டாம்
கொலஸ்ட்ரால் வரும்”
இப்படி
எப்படியும் சொல்லலாம்
கையில்
காசில்லை என்பதை
கொஞ்சம் கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
நகர்த்தி நட்டிருக்கிறார்கள் அவ்வப்போது
பத்துப் பதினைந்து முறையேனும்
எனக்குத் தெரிய
இந்த இருபத்தி ஐந்து வருடத்தில்,
ஆபத்துகளை அப்புறப் படுத்த வக்கில்லாத
நகராட்சிக் காரர்கள் அதில்
புது வண்ணம் பூசி எழுதி வைத்திருக்கிறார்கள்
ஆபத்தான வளைவென்று
கருத்துகள்