harikharan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  harikharan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jun-2016
பார்த்தவர்கள்:  20
புள்ளி:  2

என் படைப்புகள்
harikharan செய்திகள்
harikharan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2016 11:23 pm

( லாரியில் கொண்டு செல்லப்படும் ஒரு மாட்டின் மொழியில் பிறந்த கவிதை. அண்மையில் இணையத்தில் மாடுகளின் அவலம் பற்றி வந்த ஒரு புகைப்படத்தின் தாக்கத்தில் எழுதிய வரிகள் )

ஆ !! வலிக்குது வே !

கொஞ்சம் பைய போங்களேன்.

மந்த மந்தயா லாரிலே கட்டி
சந்த சந்தையா கூட்டிட்டு போறேளே,
நோவுது வே !
பசிக்குது வே !

புல்லும் புண்ணாக்கும் நல்லா இருக்குமே,
நெல்லு அடிச்ச வைக்கோலும்
நல்லா இருக்கும் வே ,
தின்னு பாக்க கூடாதா ? பாவம்
எங்கள கொன்னு தான் திங்கணுமா ?

தப்பென்ன செஞ்சேன்னு சொல்லுங்க எசமான்,
பருத்தி கொட்ட வேணும்னு உன்னைய
வருத்தி எடுக்க மாட்டேன் ,
கொசு கடிச்சாலும் குளிரு அடிச்சாலும்
சத்தம் இனி

மேலும்

அருமையான படைப்பில் ஓர் அழுத்தம். வாழ்த்துக்கள் .... 09-Jul-2016 11:52 am
மனிதர்களின் ஓலமே கேட்காத காதுகளுக்கு ஐந்தில் கதறல்கள் இனிமையாகத்தான் இருக்கிறது 08-Jul-2016 11:49 am
harikharan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2016 1:02 pm

போரெனின் அரியெனச் சீறி வெல்லும்
பேராண்மைத் தசரதன் குலத்து மாணிக்கம்,
கம்பன்தன் தமிழ் வரிகட்கும் எட்டாத
ஒப்பற்ற அழகன், அவன்தன் விரிமார்
விரித்துப் பருத்த தோளில் கோதண்டம்
தரித்துப் புவனம் வலம்வருவது காணின்
உருகித் தன்னிலை மறக்காதோருளரோ !
அரக்கர் குலச்செம்மல் சிரம் பத்துடையோன்
அருமைத் தமக்கை பாவி சூர்ப்பணகை
இராமனைக் கண்ட கணத்தில் மோகித்து
கரியுரு தவிர்த்து மாயவுரு எடுத்தது
பிழையென மொழிவீரோ ? இவ்வுலகு யாக்கை
இழந்தபின் மாலன் மடிசேர் நல்வினைசெய்
ஆழ்வாரும் அவியுணவு உண்ணும் தேவரும்
ஆழ்கடல் குதித்துப் பார்மகள் காத்தப்
பிழையிலாப் பரந்தாமன் திருமேனி கண்டு
தொழுதொழுகி நிற்பாரே ! நிகரில்லா ம

மேலும்

அருமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jun-2016 5:37 pm
கருத்துகள்

மேலே