sgkarthik - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sgkarthik
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Apr-2012
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  0

என் படைப்புகள்
sgkarthik செய்திகள்
sgkarthik - சேயோன் யாழ்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2015 7:42 pm

மழையென்பது யாதெனக் கேட்கும்
மகவுக்குச் சொல்வேன்
நீ எனக்கு
நான் உனக்கு

மழையென்பது யாதென
சின்ன வயது சேயோனிடம் கேட்டால்
அம்மா வடை சுடுவதற்கு
சற்று முன் வருவதென்பான்

மழையென்பது யாதெனக் கேட்கும்
மனைவிக்குச் சொல்வேன்
வெறுத்துக் கெடுக்கும்
விரும்பியும் கெடுக்கும்
உன்னைப் போல்தான் அதுவும்
பொய்த்துக் கெடுக்கும்
பெய்தும் கெடுக்கும்

மழையென்பது யாதென
என்னை நான் கேட்பேன்
இறுகிக் கிடக்கும்
மனித மனங்களில்
கொஞ்சமாவது
ஈரம் தோன்ற
நனைத்து விடவேண்டுமென்ற
பிரபஞ்சத்தின் விடாமுயற்சியென்று
சொல்லிக்கொள்வேன்

ஒழுகும் இடங்களில்
அலுமினியக் குண்டான்களை வைத்துவிட்டு
ஈர விறகு அடுப்புக்கு
ஓய

மேலும்

இதுநாள் வரை நான் காணாமல் போன உங்கள் கவிதைகளில் லயிக்கிறேன் 30-May-2015 8:54 am
மழையென்பது யாதென என்னை நான் கேட்பேன் இறுகிக் கிடக்கும் மனித மனங்களில் கொஞ்சமாவது ஈரம் தோன்ற நனைத்து விடவேண்டுமென்ற பிரபஞ்சத்தின் விடாமுயற்சியென்று சொல்லிக்கொள்வேன். எதார்த்த நெறி. 20-May-2015 11:20 pm
ரசனைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி! 27-Apr-2015 11:19 am
மழை தருவது போலவே உங்களைப் போன்ற கவிதை நண்பர்களுடன் உரையாடுவதும் எனக்குக் கவிதைகளை நிறையத் தருகிறது. அன்புக்கு நன்றி! 27-Apr-2015 11:19 am
sgkarthik - சேயோன் யாழ்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2015 8:24 pm

பச்சைப் பூத்துவாலையால்
நீ தலை துவட்டிக் கொண்டிருக்கும்
அழகைப் பார்த்தால்
சிரிப்புத்தான் வருகிறது,
உன் கூந்தல் மேகம்
சுமந்த நீரையெல்லாம்
போயும் போயும்
ஒரு பூத்துவாலைக்கா பொழிவது?

பார்ப்பவர்களையெல்லாம்
பார்வையாளர்களாக்கி
விழிகளால் நீ நடத்திய
வீதி நாடகங்களின்
கடைசிப் பார்வையாளனாய் வந்து
உன் காதல் நாடகத்தில்
ஒரு பாத்திரமாகிப்போனவன் நான்

ஓர விழிப்பார்வையால்
என்னருகே இருக்கும்
யாரையோ நீ
பார்த்துப் போகும்போது
சாரலடிப்பது போல்
சிலிர்த்துக் கொள்ளும்
சாதாரணன் நான்

உன் காதலர் சிலர் உளரேல்
அவர் பொருட்டுப் பெய்யும்
உன் காதல் மழையில்
நானும் கொஞ்சம்
நனைந்துவிட்டுப் போகிறேன்

மேலும்

அழகான சாரல் மழை கவியெங்கும் காதல் மழை.... 22-Oct-2015 6:33 am
கருத்துப் பதிவுக்கு நன்றி தோழரே! 16-Jun-2015 1:20 pm
நனையக் கூடாதென நான் குடைபிடித்தால் அது கோழைத்தனம் நான் நனையக்கூடாதென்று நீ இமைக்குடை சாய்ப்பது நரித்தனம். நயம். 20-May-2015 11:16 pm
கருத்துப் பகிர்வுக்கு நன்றி தோழரே! 30-Apr-2015 2:57 pm
மேலும்...
கருத்துகள்

மேலே