sgkarthik- கருத்துகள்

மழையென்பது யாதென
என்னை நான் கேட்பேன்
இறுகிக் கிடக்கும்
மனித மனங்களில்
கொஞ்சமாவது
ஈரம் தோன்ற
நனைத்து விடவேண்டுமென்ற
பிரபஞ்சத்தின் விடாமுயற்சியென்று
சொல்லிக்கொள்வேன்.

எதார்த்த நெறி.

நனையக் கூடாதென
நான் குடைபிடித்தால்
அது கோழைத்தனம்
நான் நனையக்கூடாதென்று
நீ இமைக்குடை சாய்ப்பது
நரித்தனம்.

நயம்.


sgkarthik கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே