கனவுநிலையுரைத்தல் (Kanavunilaiyuruththal)

குறள் எண் கனவுநிலையுரைத்தல்
1211 காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
1212 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
1213 நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
1217 நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
1219 நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
1220 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பொருட்பால்
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

காமத்துப்பால்
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
மேலே